இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 11 March, 2022 11:01 AM IST

குறைந்த முதலீட்டில் கூடுதல் வருமானம் பார்க்க விரும்புபவர்களா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் வரி சேமிப்புக்கு உதவுவதுடன், அதிக வட்டியையும் பெற்றுத் தருகிறது. இதன் மூலம் நாம் குறைந்த முதலீடு செய்துவிட்டு அதிக லாபம் ஈட்ட முடியும். அதிலும் சில வங்கிகளில் வரி சேமிப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு அதிக வட்டி கிடைக்கும்.

பொதுவாகபணத்தை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்ட நிறைய திட்டங்கள் உள்ளன. ஆனால் வரியைச் சேமிக்கும் முதலீட்டு வாய்ப்புகள் குறைவுதான். அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் வரி சேமிப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டம். இதில் உறுதியான வருமானமும் கிடைக்கிறது.

வரிச்சலுகை

இத்திட்டத்தில் சேமிக்கும் முதலீட்டாளர்களுக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80சி-இன் கீழ் வரிச் சலுகை கிடைக்கிறது. இதில் ரூ.1.50 லட்சம் வரை மிச்சப்படுத்தலாம்.பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு திட்டங்களை விட இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் குறைந்த அபாயத்தில் அதிக லாபம் கிடைக்கிறது.

சிறு முதலீட்டாளர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும். வரி சேமிப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டால், அடுத்து எந்த வங்கியில் முதலீடு செய்வது என்பதைத் திட்டமிடவேண்டும். ஏனெனில் வங்கிக்கு வங்கி வட்டி விகிதம் மாறுபடுகிறது. 5 சதவீதத்துக்கு மேல் வட்டி லாபம் தரும் வங்கிகள் பற்றியப் பட்டியலைத் தருகிறோம்.

  • இந்தஸ் இந்த் பேங்க் - 6.5 % வட்டி

  • RBL பேங்க் - 6.3 % வட்டி

  • IDFC ஃபர்ஸ்ட் பேங்க் - 6.25 % வட்டி

  • DCB பேங்க் - 5.95 % வட்டி

  • கரூர் வைஸ்யா பேங்க் - 5.9% வட்டி

குறிப்பாக ஏற்கெனவே சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயே நீங்கள் வரி சேமிப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடங்கலாம். அல்லது வேறு வங்கிகளிலும் புதிதாகத் தொடங்க முடியும். எனவே எங்கு ஃபிக்சட் டெபாசிட் செய்வது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

மேலும் படிக்க...

தொட்டால் உயிர்பறிக்கும் தாவரங்கள்- Death plant!

பிறந்து 7 நாட்களே ஆனப் பெண் குழந்தை- சுட்டுக்கொன்றத் தந்தை!

English Summary: Want to get wet in the rain of money? FD!
Published on: 11 March 2022, 11:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now