சாதாரண மனிதர்கள் விண்வெளிக்கு பயணிப்பது கடினம். அவர்களும் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்த நாசா இந்தாண்டு விண்ணில் ஏவ உள்ள ஓரியன் விண்கலத்தில் பொது மக்கள் பதிவு செய்யும் பெயர்களை பிளாஷ் டிரைவில் வைத்து அனுப்ப உள்ளது. இலவச பதிவான இவற்றில் 10 லட்சம் டன் பேர் தங்கள் பெயர்களை இணைத்துள்ள ஆர்டெமிஸ் என்ற பெயரில் சர்வதேச மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை அமெரிக்கா துவங்கியுள்ளது.
பரிசோதனை முயற்சி (Experimental attempt)
2025க்குள் மனிதர்களை நிலவிற்கு, குறிப்பாக நிலவின் தென் துருவத்திற்கு அனுப்புவது இதன் நோக்கம். அதற்கு முன்பாக பரிசோதனை முயற்சியாக ஆர்டெமிஸ் ஒன்று திட்டத்தை இந்தாண்டு செயல்படுத்த உள்ளனர். இத்திட்டத்தில் மனிதர்களை அனுப்பப் போவது இல்லை. மனிதர்கள் செல்லக்கூடிய ஓரியன் விண்கலத்தை எஸ்.எல்.எஸ்., எனும் உலகின் சக்திவாய்ந்த ராக்கெட் மூலம் புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து மே அல்லது ஜூன் மாதம் ஏவ உள்ளனர்.
இந்த விண்கலம் சுமார் 6 வாரங்களில் 4.5 லட்சம் கிலோமீட்டர் பயணித்து நிலவை கடந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் சென்று திரும்பும். மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட விண்கலம் இதுவரை செல்லாத அளவிற்கு ஆழ்ந்த விண்வெளிக்கு செல்லும். அப்போது விண்கலம் உள்ளிட்ட அமைப்புகள் சரியாக இயங்குகிறதா என பரிசோதிக்கப்படும். பின்னர் நிலவை சுற்றி வரும் ஓரியன் விண்கலம் பூமியை நோக்கி பயணித்து கலிபோர்னியா கடலில் ஸ்பிளாஷ்டவுன் முறையில் பாதுகாப்பாக தரையிறங்கும். இந்த பயணத்திட்டத்தில் மற்ற பயன்பாடுகளுக்கான கியூப்சாட் செயற்கைக்கோள்களும் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.
இந்நிலையில் பொது மக்களின் பெயர்களை சேகரித்து நாசா ஓரியன் விண்கலத்துடன் நிலவை சுற்றி வர வைக்க உள்ளது. இதற்கான பதிவு கடந்த மார்ச் 11 தொடங்கி நடைபெற்று வருகிறது.
விண்ணப்பிக்க (Apply)
https://www.nasa.gov/send-your-name-with-artemis/ என்ற நாசாவின் தளத்திற்கு சென்று பெயர், தந்தை பெயர், தபால் பெட்டி எண் அளித்தால் விமான டிக்கெட் போல போர்டிங் பாஸ் க்யூஆர் கோடுடன் தயாராகிறது. அதன் பின் விண்கலத்துடன் நமது பெயரும் பூமியையும், நிலவையும் சுற்றி வரும். அதை நினைக்கும் போது விண்வெளிக்கு செல்லவே டிக்கெட் கிடைத்தது போன்ற பரவசம் ஏற்படுகிறது.
மேலும் படிக்க