Others

Thursday, 07 April 2022 05:35 PM , by: R. Balakrishnan

Washing machine in the bath water

நகர்புறத்திற்கு தண்ணீரைக் கொண்டுவர பெருஞ்செலவு பிடிக்கிறது. அதற்குத் தயாராக இருந்தாலும், நீர் பற்றாக்குறையால் நகரங்கள் தவிக்கின்றன. இந்த நிலையில், குளியல் நீரை மறுசுழற்சி செய்து, துணியைத் துவைத்துத் தரும் இயந்திரம் ஒரு வரவேற்பிற்குரியதாக மாறியிருக்கிறது.‌ ஒரு சராசரி துவைக்கும் இயந்திரம், 80 லிட்டர் வரை தண்ணீரைப் பயன்படுத்துகிறது. எனவே, இங்கிலாந்திலுள்ள லைலோ புராடக்ட்சின் நிறுவனர்கள், குளியல் நீர் மறுசுழற்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு துவைக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர்.

மறுசுழற்சி (Recycling)

இங்கிலாந்தில் அடுத்த 25 ஆண்டுக்குள் கடும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்ற ஒரு புள்ளி விபரம் தான் இந்த கண்டுபிடிப்புக்கு உந்துதலாக இருந்திருக்கிறது. குளியலறையில் தரையில் ஒரு தட்டையான தொட்டி வைக்கப்படும். அதன் மேல் நின்றபடி குளிக்க வேண்டும். கீழே உள்ள தொட்டி, சோப்பு, அழுக்கு கலந்த குளியல் நீரை சேமித்துக்கொள்ளும்.

பிறகு, அந்த தொட்டியை எடுத்து, லைலோவின் மறுசுழற்சி துவைக்கும் இயந்திரத்துடன் இணைக்கவேண்டும். அந்த இயந்திரத்தின் மோட்டார்கள், குளியல் நீரை வடிகட்டி, துவைக்கப் பயன்படுத்தும்.

இந்த புதுமைக் கண்டுபிடிப்பு பரவலாக சந்தைக்கு வரவிருக்கிறது. இருந்தபோதிலும், லைலோ மறுசுழற்சி துவையல் கருவிக்கு இங்கிலாந்தில் பல விருதுகள் கிடைத்துள்ளன.

மேலும் படிக்க

தமிழகத்திற்கு தேசிய நீர் விருது: நீர் மேலாண்மையில் மூன்றாவது இடம்!

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து இயற்கை எரிவாயு விலையும் இருமடங்கு உயர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)