தமிழகம் மற்றும் புதுவையில் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போதைய வானிலை அறிக்கையின் படி கோவை, நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி போன்ற 6 மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மற்ற இடங்களில் வறண்ட வானிலையும் நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
நேற்று மேட்டுப்பாளையம், சின்னகல்லார், நடுவட்டம், ஓசூர், நடுவட்டம், அரவக்குறிச்சி போன்ற இடங்களில் ஓரளவிற்கு மழை பெய்தது. அதிக பட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 7 செ.மீ. மழையும், குறைந்த பட்சம் சேலம் மாவட்டம் ஏற்காடு 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதே பகுதிகளுக்கு மீண்டும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran