9 முக்கிய துறைகளில் உற்பத்தித் துறை 39 சதவீதம் வேலைவாய்ப்பு (Employment) வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்தார். அதில் வேலைவாய்ப்பு வழங்கும் முக்கியத் துறைகளை சுட்டிக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு ஆய்வு (Employment Research)
அகில இந்திய அளவில் காலாண்டுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு ஆய்வை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி 2021 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டு காலத்தில் பொருளாதாரத்தின் 9 தேர்வு செய்யப்பட்ட துறைகளில், வேலைவாய்ப்பு 3.10 கோடியாக அதிகரித்துள்ளது. இது முதல் காலாண்டில் 3.08 கோடியாக இருந்தது.
2013-14 ஆம் ஆண்டில் 6-வது பொருளாதார கணக்கெடுப்பின்படி இத்துறைகளில் மொத்தம் 2.37 கோடியாக வேலைவாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. 9 துறைகளில் உற்பத்தித் துறையில் 39 சதவீதமும், கல்வித்துறையில் 22 சதவீதமும், சுகாதாரம், ஐடி துறைகளில் தலா 10 சதவீதமும், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைகள் முறையே 5.3 சதவீதம் மற்றும் 4.6 சதவீதமாக உள்ளது.
வேலைவாய்ப்பு அதிகரிப்பு (Increased Employment)
பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில், முதலீடு செய்துள்ளதால், வேலைவாய்ப்பு அதிகரிப்பதாக தெரிகிறது. ஆனால், இந்திய நாட்டின் பொதுமக்கள் முடிந்த அளவுக்கு சுயதொழிலை மேற்கொண்டு முன்னேற முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு, செய்வதனால் மேலும் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு வேலையில்லா திண்டாட்டமும் குறையும்.
மேலும் படிக்க
பிப்ரவரி மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
தென்னீரா பானம் பொருளாதார புரட்சி ஏற்படுத்தும்: உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நம்பிக்கை!