திருமணம் என்பது தனி மனிதரின் வாழ்நாள் கனவு. அந்தக் கனவு நிறைவேறும்போது, இயற்கையான முறைடியல் இடையூறு ஏற்பட்டால் என்னதான் செய்ய முடியும். அப்படியொரு இடையூறாகக் கடந்த 2 ஆண்டுகளாக வலம்வந்து கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கைத்தான் இடையூறு என்று கூறுகிறோம்.
தமிழகத்தில் ஞாயிறு ஊரடங்கு காரணமாக, கோவில்கள் அடைக்கப்பட்டன. இதனால் வேறு வரியின் மணமக்கள் கோவில் வாசலில், நடுரோட்டில் தங்கள் திருமணத்தைச் செய்து கொண்டனர். இவ்வாறாக கடந்த வாரம் மட்டும் 90 திருமணங்கள் நடுரோட்டில் நடந்தது.
பக்தர்களுக்குத் தடை (Prohibition for devotees)
கடந்த ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த தினம் அன்று தமிழகத்தில் ஏராளமான திருமணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கோவில்கள் எல்லாம் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றம் (Disappointment)
ஆனால் முன்கூட்டியே கோவில்களில் திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திடீரென அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக, திருமணம் நடத்தத் திட்டமிருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் கோவில்களுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை என்பதால் பலர் கோவில் வாசலில் நடு ரோட்டிலேயே திருமுணம் செய்தனர்.
வைரல்
கடலூர் மாவட்டம்ம திருக்கோவிலூர் விஷ்ணு கோவிலில் நடுரோட்டில் 90 திருமணங்கள் நடைபெற்றன. அப்பகுதியை சுற்றியுள்ள சுமுார் 12 கி.மி தொலைவிலிருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து திருமணம் செய்து சென்றனர். நடுரோட்டில் திருமணம் நடந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க...