ஒரு புதிய முயற்சியைத் தொடங்குவதற்கு அல்லது ஏற்கனவே உள்ள வணிகத்தை விரிவுபடுத்துவதற்கு ஒரு முதலீடுகள் மிகவும் அவசியம். பல்வேறு வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் வணிகக் கடன்கள் உங்கள் யோசனைக்கு சிறகுகளை விரிக்க உதவுவதோடு கடன்களையும் வாரி வழங்குகிறது. இதை நிஜ உலகில் எப்படி செயல்படுத்துவது வெற்றி பெறுவது உங்கள் சாமார்த்தியம்தான். இருப்பினும், எந்தவொரு வணிகத்திற்கும் கடன் வழங்குவதற்கு முன் சில விஷயங்களை சரிபார்ப்பது நல்லது.
தொழில் கடன் (Business Loan)
முதலில் கடனுக்காக விண்ணபிக்கும்போது பல நிதி நிறுவனன்கள் மற்றும் வங்கிகளில் ஒரே நேரத்தில் கடனுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. ஏனெனி அதில் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டாலும் தொடர்ந்து உங்கள் விண்ணப்ங்கள் அனைத்து வங்கியிலும் நிராகரிக்கப்படும். மேலும் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மட்டும் கடன் வாங்குவது நல்லது.
அடுத்து உங்கள் CIBIL மதிப்பெண் நன்றாக இருக்க வேண்டும். ஏனெனில் கடன் வாங்குபவரின் கடன் தகுதியின் சான்றிதழாகும். அதிக CIBIL மதிப்பெண் கடன் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நிகழ்தகவை அதிகரிக்கும், குறைந்த மதிப்பெண்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவே, ஒழுக்கமான நிதி நடைமுறையின் மூலம் நல்ல CIBIL மதிப்பெண்ணைப் பராமரிப்பது மிகவும் நல்லது.
வணிகக் கடனுக்கான விண்ணப்பத்துடன், கடன் வாங்குபவர், KYC தொடர்பான ஆவணங்கள், வருமானச் சான்று மற்றும் நிறுவன விவரங்கள் உள்ளிட்ட பல ஆதார ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் இல்லாதது உங்கள் வணிகக் கடன் விண்ணப்பத்திற்கு ஒரு பெரிய சவாலாக இருக்கலாம் ஆகவே இவற்றை முறையாக பெற்றிடுங்கள். வணிகக் கடன்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், உங்கள் முயற்சியைப் பதிவு செய்வது மிக முக்கியம். வணிக முயற்சி இல்லாதது உங்கள் கடன் விண்ணப்ப ஒப்புதலின் நிகழ்தன்மையை குறைக்கும்.
முத்ரா கடன் திட்டம்
சுய தொழில் தொடங்குவோரை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. சுய தொழில் தொடங்குவதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என அரசு நம்புகிறது. எனவே, சுய தொழில் தொடங்குவோருக்கு கடன் வழங்குவதற்கான முத்ரா கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமர் முத்ரா கடன் (Pradhan Mantri Mudra Yojana) திட்டம் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சிறு, குறு தொழில்களுக்கு உதவுவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. தொழில் தொடங்க விரும்புவோர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை 18.60 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. சிஷு, கிஷோர், தருண் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் முத்ரா கடன் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க
PF அதிக பென்சன் பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!
பெனசன் இணையதளங்களை ஒருங்கிணைக்கும் மத்திய அரசு: அமைச்சர் தகவல்!