அந்தந்தக் காலத்திற்கு ஏற்ப, தொழில்நுட்ப வசதிகளுடன் சேர்ந்து நாடும் நாடும் வளரவேண்டியது அவசியம்தான். அப்படி, கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன் மட்டுமே போதும். சாப்பாடு முதல் சமையல் சிலிண்டர் வரை ஆன்லைனில் புக் செய்யலாம்.
குறிப்பாக சிலிண்டர் புக் செய்வதில் உள்ள சிக்கலைத் தீர்க்க தற்போது வாட்ஸ் ஆப் வசதியும் வந்துவிட்டது. பொதுவாக மக்கள் ஒரு மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ சமையல் சிலிண்டர்களை புக்கிங் செய்து வாங்குகின்றனர்.
சிலிண்டர் புக்கிங் (Cylinder booking)
சிலிண்டர்களை புக்கிங் செய்து வாங்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன. SMS, மிஸ்டு கால், ஆன்லைன், மொபைல் ஆப் என நிறைய ஆப்சன்கள் உள்ளன. ஆனால் வாட்ஸ் ஆப் மூலமாக முன்பதிவு செய்வது மிக எளிதாக உள்ளது.
ஏனெனில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருமே வாட்ஸ் ஆப்பை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். எனவே வாட்ஸ் ஆப் மூலமாக புக்கிங் செய்வது ஈசியாக இருக்கும்.
புக்கிங் செய்வது எப்படி?
ஒவ்வொரு சிலிண்டர் நிறுவனத்துக்கும் தனித்தனியாக வாட்ஸ் ஆப் நம்பர் உள்ளது. அதன் மூலமாக நீங்கள் எளிதாக சிலிண்டர் புக்கிங் செய்ய முடியும்.இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் இண்டேன் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண்ணுக்கு REFILL என்று டைப் செய்து அனுப்பினால் போதும். அதேபோல, HP சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 9222201122 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு BOOK என்று டைப் செய்து மெசேஜ் செய்தாலே போதும்.
பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் 1800224344 என்ற எண்ணுக்கு BOOK என்று டைப் செய்து அனுப்ப வேண்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால் சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்துதான் வாட்ஸ் ஆப் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க...
பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கால்சியம் குறைபாடு!
பிச்சை எடுத்து அன்னதானத்திற்கு ரூ1 லட்சம் நிதி- பிரமிப்பூட்டிய பாட்டி!