இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 4 September, 2022 5:44 PM IST

உத்தரவாதத்துடன் வருமானம் தரக்கூடிய பென்சன் தரும் திட்டம் இன்னும் ஒரு சில மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDAவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பென்சன் திட்டத்தை (NPS) பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA நிர்வகித்து வருகிறது. உத்தரவாதத்துடன் வருமானம் தரக்கூடிய பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஏற்கெனவே PFRDA தலைவர் சுப்ரதீம் பந்தோபத்யாய் தெரிவித்திருந்தார்.

வருமான உத்தரவாதம்

இத்திட்டத்தில், சொல்லப்பட்ட விகிதத்தில் குறைந்தபட்ச வருமானம் உத்தரவாதத்துடன் கிடைக்கும். இந்நிலையில், இந்த உத்தரவாத பென்சன் திட்டம் இம்மாத இறுதிக்குள் தயார் செய்யப்படும் என PFRDA தலைவர் சுப்ரதீம் பந்தோபத்யாய் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த உத்தரவாத பென்சன் திட்டம் இம்மாதம் அறிமுகப்படுத்தப்படாது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு கூடுதலாக இன்னும் சில மாதங்கள் தேவைப்படும் என சுப்ரதீம் பந்தோபத்யாய் தெரிவித்துள்ளார்.

இறுதி வடிவம்

இதுகுறித்து அவர், பென்சன் நிதி மேனேஜர்கள், நிபுணர் குழு உறூப்பினர்களுடன் இதுகுறித்து இரண்டு - மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இத்திட்டத்துக்கு ஒரு வடிவம் கொடுத்துள்ளோம். செப்டம்பர் இறுதிக்குள் இத்திட்டம் இறுதிகட்ட வடிவத்தை எறும்.

எனினும், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு இன்னும் சில காலம் ஆகும். ஏனெனில், இது முழுக்க முழுக்க புது வகையான திட்டம் என்பதால் அமைப்புரீதியாக பல்வேறு மாற்றங்கள் தேவைப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

எவ்வளவு விகிதத்தில் வருமானம் கிடைக்கும் என்பது இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. கடந்த 13 ஆண்டுகளாக PFRDA பென்சன் திட்டங்களுக்கு சராசரியாக 10% வருமானம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

முதியோருக்கு 2500 ரூபாய் பென்சன்- அரசு அறிவிப்பு!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

English Summary: When will the new pension scheme come into effect!
Published on: 04 September 2022, 05:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now