Others

Thursday, 30 December 2021 08:24 AM , by: Elavarse Sivakumar

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அந்த வகையில், உலகின் மிகவும் உயரமான மனிதரான சுல்தான் கோசென், தற்போது ரஷ்யாவில் தனக்குப் புதியத் துணை கிடைக்குமா எனத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்.

கின்னஸ் சாதனை (Guinness World Record)

39 வயதான சுல்தான் கோசென், தென்கிழக்கு துருக்கிய நகரமான மார்டினில் பிறந்தவர். இவர் உலகின் மிக உயரமான மனிதருக்கான கின்னஸ்  சாதனையைப் படைத்துள்ளார்.

உயரத்திற்கு காரணம் (Due to the height)

மனிதர் அனைவரது வளர்ச்சிக்கும் காரணமாக இருப்பது, மூளையின் தண்டுவடத்தின் கீழ் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆகும். அது அனைவருக்கும் சராசரியானச் செயல்பாடுகளை மேற்கொள்ளும்.

ஆனால் சுல்தான் கோசென்னுக்கு பிட்யூட்டரி சுரப்பியின் அசாதாரணமான செயல்பாடு காரணமாக அவர் அசுர வளர்ச்சி பெற்றார். அவர் 8 அடி 3 அங்குலம் (251 செ.மீ.) உயரத்துடன் காணப்படுகிறார்.

திருமணம் (Wedding)

இவர் 2013-ல் சிரியாவைச் சேர்ந்த மெர்வ் டிபோ என்றப் பெண்ணை மணந்தார். ஆனால் அவர் அரபு மொழி மட்டும் பேசியதால் இருவருக்கும் இடையே கருத்துக்களை பரிமாறிக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக இந்த ஜோடி அண்மையில் விவாகரத்து பெற்றது.

ரஷ்யப் பயணம் (Travel to Russia)

இதையடுத்து தனது புதியத் துணையை அமைத்துக்கொள்ளத் திட்டமிட்டார் சுல்தான். சுல்தான் கோசென் தற்போது, தனது புதியத் துணையைத் தேடி ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிற்கு பயணம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் ரஷ்ய தொலைக்காட்சி பேட்டியில் கூறும்போது, "நான் புதிய காதலியைத் தேடி இங்கு வந்துள்ளேன்.

துருக்கியில் புதிய வாழ்க்கை

மேலும் ரஷிய பெண்கள் மிகவும் அன்பானவர்களாகவும், மிகவும் அழகானவர்களாகவும் இருப்பதை அறிந்தேன். எனக்கு பிடித்த பெண்ணை 

திருமணம் செய்துகொண்டு மீண்டும் துருக்கிக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ரஷிய பெண் எனக்கு ஒரு மகனையும், மகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதனையே நான் விரும்புகிறேன். இவ்வாறு சுல்தான் கோசென் கூறினார்.

மேலும் படிக்க...

35 ஆண்டு கர்ப்பம்- 73 வயது பாட்டிக்கு அறுவை சிகிச்சை மூலம் கல்குழந்தை!

ரூ.10-க்கு ஒயின்- மளிகைக்கடையில் விற்பனை செய்ய அரசுத்திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)