Others

Saturday, 05 February 2022 07:24 PM , by: Elavarse Sivakumar

சந்தோஷத்தின் பிறப்பிடமாகத் திகழும் குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையேயான உறவு புனிதமானது. இந்த உறவு சீரானதாக இருந்தால்மட்டுமே, வாழ்க்கை நிம்மதியானதாக இருக்கும். இதற்கு இருவருமே பரஸ்பரம் விட்டுக்கொடுத்து, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நடப்பது மிக மிக அவசியம்.

ஆனால் சினிமா பாணியில் கணவரை விற்பனை செய்யும் மனைவிகளும் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான். அயர்லாந்தில் நடந்திருக்கிறது இந்தக் காமெடிக்கூத்து. விடுமுறை நாட்களில் தங்கள் மகன்களுடன் சேர்ந்துக் கணவன் அடித்த லூட்டியைத் தாங்க முடியாமல், கணவன் விற்பனைக்கு, No Exchange என விளம்பரம் செய்திருக்கிறார் லிண்டா என்ற மனைவி.

லூட்டி

கணவர், மீன் பிடிக்க குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற நேரத்தில் இந்த பெண்மணி இத்தகைய விளம்பரத்தை இன்டர்நெட்டில் பதிவிட்டுள்ளார். லிண்டா மெக் அலிஸ்டர் எனும் அந்த பெண், குறிப்பிட்ட விளம்பரத்தில், "இவர் பெயர் ஜான், உயரம் 6 அடி, வயது 37, ஷூட்டிங், ஃபிஷ்ஷிங் ஆர்வம் உள்ள நபர், பீஃப் ஃபார்மர், இன்னும் வீட்டு வேளைகளில் கொஞ்சம் அனுபவம் தேவை, தற்சமயம் இவரை வைத்து மேய்க்க தனக்கு பொறுமை இல்லை", என விளம்பரத்தில் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
மேலும், விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் சேர்த்துக் கொண்டு லூட்டி அடிப்பதாகவும், இரவு தாமதமாக உறங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதெல்லாம் தனது கோபத்தை தூண்டுவதாக வேடிக்கையாகப் பகிர்ந்திருந்தார் லிண்டா.

கோபம் வரவில்லை

இவர்களுக்கு கோல்ட் எனும் 4 வயது மகனும், ரைடர் எனும் 6 வயது மகனும் இருக்கின்றனர். விளம்பரச் செய்தியை ஆன்லைனில் கண்டு ஜானின் நண்பர்கள் அவரை அழைத்து விஷயத்தைச் சொன்னபோது, கொஞ்சமும் கோபப்படாமல், வேடிக்கையாக சிரித்தார் ஜான் என்று லிண்டா கூறி இருக்கிறார்.

மேலும், இந்த விளம்பரம், குறிப்பிட்ட இணையத்தளத்தின் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்களுக்கு கீழ் இல்லாத காரணத்தால், குறுகிய நேரத்தில் நீக்கப்பட்டது. ஆனால், இந்த குறுகிய காலத்தில் 25 டாலருக்கு விற்பனை விலை நிர்ணயக்கப்பட்ட ஜானுக்கு 63 யூரோ வரை ஏலத்தின் விலை கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ரூ.100யை எட்டிய கேரட் - வரத்து குறைவால் விலை உயர்வு!

கோழிக்கொண்டை பூ சாகுபடிக்கு மானியம் ?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)