வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் வாழ்க்கை இயந்திர மயமானதால் உலக்கை, உரல் பயன்பாடு குறைந்தது. பண்டைய காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உரல், உலக்கை கட்டாயம் இருக்கும். கொழுக்கட்டை, அப்பளம், அதிரசம் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் செய்வதற்கு உரலில் போட்டு இடிப்பார்கள்.
உலக்கை பயன்பாடு
வீட்டு முறையில் செய்யும் பல உணவு பொருட்கள் நல்ல சத்து மிகுந்தும், ருசியாகவும் இருந்தது. தற்போது எல்லாம் இயந்திரமயமாகி விட்டதால் இதுபோன்ற உலக்கைக்கும், உரலுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது. உலக்கையின் பயன்பாடு வெகுவாக குறைந்ததால் வீடுகளில் ருசியாக உண்ணும் பனியாரங்கள் நாளைடைவில் கிடைப்பதற்கு அரிய பொருளாக மாறிவிட்டது.
பழைய உணவு முறை
கிராமங்களில் வயதான பெரியவர்கள் இருக்கும் வரை பழைய உணவு முறை இருந்தது. தற்போது உணவு பழக்கம் மறைந்து போகும் நிலை உருவாகி அம்மியும், ஆட்டுக்கல்லையும் தேடி கண்டுபிடிக்கும் நிலை மாறிவிட்டது.
அதே போல் கோயில்களில் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அந்த நோய் சரியானவுடன் கோயில் சன்னதியில் தரையில் படுக்க வைத்து வயிற்றில் மாவிளக்கு வைத்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள். மாவிளக்கு செய்வதற்காக கோயில்களில் பின்புறம் நிறைய உலக்கைகள், உரல்கள் இருக்கும்.
ஆனால் தற்போது விஞ்ஞான வளர்ச்சியால் மிக்ஸியில் (Mixi) அரைக்கப்பட்ட மாவை கொண்டு வந்து வழிபாடு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.பழமை வாய்ந்த இந்த பொருட்கள் பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டதால் அதிகம் பாதிக்கபடுவது பெண்கள் தான். உடல் உழைப்பு இல்லாமல் போனதால் முதுகு வலி, கை, கால் உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்திற்கும் மெஷின் (Machine) வந்துவிட்டதால் பெண்களுக்கு உடல் இயக்கம் இன்றி ஆரோக்கியம் குறைந்துவிட்டது. குனிந்து நிமிர்ந்து செய்த அந்த வேலை முதுகெலும்பை பலப்படுத்தியது. பழமையும், புதுமையும் கலந்தது தான் வாழ்க்கை. யாருக்கு எது தேவை என்பதை அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும்.
மேலும் படிக்க
இரு தலை, 3 கண்களுடன் பிறந்த கன்று: நவராத்திரியில் நடந்த அதிசயம்!
ஊராட்சி மற்றும் ஒன்றிய தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது தி.மு.க.!