குளிர்காலத்தில் புதிய காய்கறிகளுக்கு பஞ்சம் இல்லை. கேரட், முள்ளங்கி, பீன்ஸ் தொடங்கி காளிபிளவர், முட்டைகோஸ், பட்டாணி என அனைத்து வகையான காய்கறிகளும், தற்போது சந்தையில் எளிதாக காணப்படும் காய்கறிகளாகும்.
எனவே காய்கறிகளை வைத்து எளிதில், எந்த வித சிரமம்மும் இன்றி, 15 நிமிடத்தில் ஊருகாய் ரேடி செய்திடலாம். இதற்கு, நீங்கள் வார கணக்கில் காய்கறியில் உலர்த்தி, உப்பு போட்டு வெயிலில் காட்ட போன்ற செய்முறை அவசியம் இல்லை. வாருங்கள் செய்முறை விளக்கத்தை பார்ப்போம்.
முதலில் தேவையான காய்கறிகள்
- முள்ளங்கி- நீளமான 1
கேரட் - நீளமான 2
பச்சை மிளகாய் - 8 லிருந்து 12
இஞ்சி - ஒரு துண்டு
இவை அனைத்தையும், தண்ணீரால் அலசி பின்னர், உங்களுக்கு ஏற்ப வெட்டிக் கொள்ளவும். விரும்பினால் பூண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
செய்முறை:
வானலியில், 1 டெபிள் ஸ்பூன் மிளகு, 1 டெபிள் ஸ்பூன் வெந்தயம், 2 டெபிள் ஸ்பூன் ஜீரகம், டெபிள் ஸ்பூன் கம்பு சேர்த்து பொன்னிறத்தில் வருத்துக் கொள்ளவும். அதன் பின்னர் அதை பொடியாக அரைத்துக்கொள்ளவும். குளிருக்கு கடுகு எண்ணெய் நன்மை பயக்கும்.
நீங்கள் எந்த எண்ணெய் வேண்டுமேனாலும் உபயோகிக்கலாம், வானலியில் எண்ணெய் சேர்த்து நன்கு சூடு ஆன பின் தீயை அமைத்துவிட வேண்டும். கோதித்த எண்ணெய்-இன் சூடு லேசாக அமர்ந்த பின்னர், பெருங்காயம் சேர்க்க வேண்டும், பின்னர் வெட்டி வைத்திருக்கும் காய்கறிகளை அதில் சேர்க்க வேண்டும்.
அதன் பின்னர், இரண்டு நிமிடம் வரை நன்கு வதக்க வேண்டும். இதன் பின்னர், தேவைக்கேற்ப உப்பு(ஊருகாய் என்பதால் சற்று கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும்), மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள். இதனுடன, ஒரு சின்ன ஸ்பூன் கலோன்ஜி மற்றும் ஒரு டெபிள் ஸ்பூன் மஞ்சள் கடுகு சேர்த்துக்கொள்ளவும். இறுதியாக, அரைத்து வைத்திருக்கும் பொடியை, இதில் சேர்க்கவும். நல்ல வதக்கி கொள்ளவும், நினைவில் கொள்ளுங்கள், காய்கறி கடிக்க கூடிய பக்குவத்தில் இருக்க வேண்டும், அப்போதுதான், இது சுவையாக இருக்கும்.
நன்கு வதக்கிய, எளிதில் ரேடியாக கூடிய ஊருகாய் தயாரிவிடும். வீட்டில் செய்து, சுவைத்திடுங்கள்.
மேலும் படிக்க:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறி விலை சரிவு, வெல்லம், அரிசி விலை உயர்வு!
தமிழகம்: 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் திட்டமிட்டப்படி திருப்புதல் தேர்வு!