Others

Monday, 07 February 2022 08:47 AM , by: Elavarse Sivakumar

41 வயது ஆடவர் ஒருவர் தனது மனைவியின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, காதலியுடன் ஓட்டலில் தங்கியிருந்ததை மனைவி GPS உதவியுடன் கண்டுபிடித்திருக்கிறார்.

சிக்கிக்கொண்டவர் குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர். இவரது நிறுவனத்தில் மனைவியை இயக்குநராக நியமித்து இருந்தார். ஆனால் மனைவியை ஏமாற்றிவிட்டு, காதலியுடன் ஊர் ஊராக சுற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

இதில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கணவரின் காரில் அவருக்கு தெரியாமல் ஜிபிஎஸ் டிராக்கரை பொருத்தி உள்ளார். அவரது கணவர் பெங்களூருக்கு பயணம் செய்யப்போவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். மனைவி ஜிபிஎஸ் டிராக்கர் மூலம் கணவரின் இருப்பிடத்தை சரிபார்த்தபோது கார் புனேவில் இருப்பதைக் கண்டுபிடித்து உள்ளார்.

உடனடியாக புனேவில் உள்ள ஓட்டலைத் தொடர்பு கொண்டு உள்ளார். சம்பந்தபட்ட அந்த நபர் தனது மனைவியுடன் ஓட்டலில் அறை எடுத்து உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு,தனது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, கணவர் வேறொரு பெண்ணுடன் ஓட்டலுக்குச் சென்றிருப்பதைக் கண்டுபிடித்தார்.

உடனடியாக இதுகுறித்து ஹிஞ்சேவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே பெண்ணின் கணவரும் அவர்து கள்ளக்காதலியும் தலைமறைவாகி உள்ளனர். அவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க...

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணம்- காற்றில் கரைந்த இந்திய இசைக்குயில்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)