Others

Saturday, 07 May 2022 10:27 AM , by: Elavarse Sivakumar

பெண்களுக்கு இனி வரும் காலங்களில், ஓட்டுனர் உரிமம் வழங்கப்படாது என, அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான் அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றினர்.

அங்கு தாலிபான் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசும் அமைக்கப்பட்டு உள்ளது. தாலிபான் ஆட்சி முறைக்கு பயந்து, ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். எனினும் கடந்த முறை போல் அல்லாமல், சம உரிமையுடன் ஆட்சி நடைபெறும் என, தாலிபான் அமைப்பினர் நம்பிக்கை தெரிவிருந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் அரசு அமைந்த பிறகு, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, பெண்கள் பள்ளிகளுக்கு செல்லவும், கல்லூரிகளுக்கு செல்லவும், தனியாக வெளியே செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டது.

இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத தாலிபான் அமைப்பு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதன்படி, பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தலைநகர் காபூல் மற்றும் பல்வேறு மாகாணங்களில் தாலிபான் அரசு நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கையகப்படுத்துவதற்கு முன்பு, காபூல் உட்பட நாட்டின் சில முக்கிய நகரங்களில் பெண்கள் வாகனம் ஓட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ஆர்டர் செய்தது பரோட்டா- வந்தது பாம்புத்தோல்!

டீக்கடைகளில் நீங்கள் அருந்தும் தேநீர் தரமானதா? கண்டுபிடிப்பது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)