அசாமின் கச்சார் மாவட்டத்தில் மனித முகத்தை போன்ற உருவத்துடன் பிறந்த ஆட்டுக் குட்டியை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
ஆட்டுக்குட்டி (Goat Cub)
அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கச்சார் மாவட்டத்தில் ஒரு விவசாயியின் வீட்டில் உள்ள ஆடு சமீபத்தில் ஈன்ற குட்டியை, கிராம வாசிகள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
மனிதர்களுக்கு இருப்பது போல் கண், மூக்கு, வாய் அமைப்புடன் இந்த ஆட்டுக் குட்டி உள்ளது. இரண்டு கால்கள் மட்டுமே உள்ளன; ஆனால் வால் இல்லை.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பரவியுள்ளது. ஆனால் சில மணி நேரங்களில் அந்தக் குட்டி இறந்து விட்டது.
அதிசயம் (Wonderful)
அதே நேரத்தில் இந்த ஆடு ஈன்ற மற்றொரு குட்டி, வழக்கமான ஆட்டுக் குட்டியைப் போலவே உள்ளது. 'கருவில் இருக்கும்போது ஏற்பட்ட பிரச்னைகளால் சில சமயம் அபூர்வமாக மாற்று உருவத்துடன் கால்நடைகளின் குட்டிகள் இருப்பது உண்டு' என, கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க