
காட்டில் விளையும் மரத்தை எரிபொருளாக பயன்படுத்துவது புதிதல்ல. ஆனால், அந்த மரத்தை சிறிய உருண்டைகளாக்கி அவற்றை எரிபொருளாக பயன்படுத்துவது தான் புதிது. கோஸ்டா ரிகாவில் ஆண்டுக்கு 1.2 மில்லியன் டன் மரம் விளைவிக்கப்படுகிறது. அதில் 40 சதவீதம் வீணாக்கப்படுகிறது. இதே விகிதத்தில் உலகெங்கும் மரங்கள் வீணாக்கப்படுகின்றன. வீணாக குப்பையில் சேரும் மரங்கள், மட்கும்போது மீத்தேன் வாயுவை வெளியேற்றுகின்றன. இவை புவி வெப்பமாதலுக்கு துணைபோகின்றன.
மர உருண்டைகள் (Wood Balls)
பெல்லட்டிக்ஸ் என்ற கோஸ்டா ரிக்கா நிறுவனம், மரங்கள் மற்றும் வேளாண் கழிவுகளை, அடித்து நெகிழ்த்தி, உலர்த்தி, இறுக்கி, உருண்டைகளாக ஆக்கும் புதிய தொழில்நுட்பத்தை படைத்துள்ளது.இதனால், சிறிய மர உருண்டைகள் நின்று நெடுநேரம் எரிவதோடு, பெட்ரோலிய பொருட்களைவிட 50 சதவீதம் விலை குறைவாகவும் உள்ளன. மேலும் பெல்லெடிக்ஸ் உருவாக்கியுள்ள இந்த நுட்பத்தால், சிறிய ஆலைகளை பல இடங்களில் கட்டுவிக்க முடியும்.
உதாரணமாக, மரவேலைகள் அதிகம் நடக்கும் மர அறுப்பு மில்கள், மரக் கடைகள், மர குடோன்களுக்கு அருகிலேயே பெல்லெட்டிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆலைகளை நிறுவ முடியும்.
இதன் மூலம், மர உருண்டைகளை வெகு தூரம் எடுத்துச் செல்லும் செலவும், அந்த வாகனங்கள் உமிழும் மாசும் மிச்சப்படும். பெல்லெட்டிக்சின் மர உருண்டைகள் பாய்லர்கள், தொழிற்சாலை உலைகள், வீடுகளுக்கு கதகதப்பூட்டுதல் போன்றவற்றுக்கு மிகவும் ஏற்றவை.
மேலும் படிக்க
பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து இயற்கை எரிவாயு விலையும் இருமடங்கு உயர்வு!
சீமைக்கருவேல மரங்களை அகற்ற இறுதி கொள்கை முடிவு: சென்னை உயர்நீதிமன்றம்!