யமஹா நிறுவனம் பெட்ரோல் மற்றும் எத்தனாலில் இயங்கும் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக, பெட்ரோல், டீசல், வாகனங்களுக்கு முடிவு கட்ட உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. அதற்கு முதல் அடி எடுத்து வைத்த அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண அரசு பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்க தயாராகி இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், 2035ம் ஆண்டிற்கு பிறகு எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட வாகனங்கள் மட்டுமே அம்மாகாணத்தில் விற்பனையில் இருக்கும்படியான நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யமஹா எஃப்இசட் - 15 (Yamaha FZ-15)
புகழ்பெற்ற யமஹா நிறுவனத்தின் எஃப்இசட் - 15 பைக்கை பெட்ரோல் மற்றும் எத்தனால் ஆகிய இரண்டிலும் இயங்கக் கூடிய புதிய வெர்ஷனில் அறிமுகம் செய்துள்ளது. இதனை ஃபேஸர் எஃப்இசட் 15 எனும் பெயரில் தெற்கு அமெரிக்க சந்தையில் தற்போது விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்திய சந்தையில் எஃப்இசட் வி3 எனும் பெயரில் விற்பனைக்கு வரலாம்.
இந்த எஃப்இசட் - 15 பைக் தோற்றம் ஒரு சில மாற்றங்களுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, முன்பக்கத்தில் ஸ்போர்ட்ஸ் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட ஹெட் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை பொறுத்தவரை மற்றபடி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே சமயம், ஏர் வெண்டுகள் கொண்ட பெரிய பெட்ரோல் டேங்க், சிங்கிள் இருக்கை, சிறிய டெயில் லைட் மற்றும் ஸ்டப்பி எக்சாஸ்ட் ஆகிய அம்சங்களே எஃப்இசட் 25 பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன.
சிறப்பம்சம் (Special Features)
எஃப்இசட் - 15 பைக்கில் பெட்ரோல் டேங்க் அளவு 11.9 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. அதுபோக செளவ்கர்யமான ரைட் செய்வதற்காக புதிதாக பைரல்லி டையப்ளோ ரோஸோ டயர்கள் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன. என்ஜினை பொறுத்தவரை முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், 2023 யமஹா எஃப்இசட் 15 பைக்கில் 149 சிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது வழக்கமான மோட்டாரில் இருந்து பல மடங்கு மாறுபட்டது.
பெட்ரோல் மற்றும் எத்தனால் (Petrol and Ethanol)
ஏற்கனவே சொன்னது போல பெட்ரோல் மற்றும் எத்தனால் என இரண்டு வேரியண்ட்டில் வெளிவருவதால், பெட்ரோலில் ஓடும்போது 12.2 பிஎச்பி பவரையும், 12.7 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். அதேவேளையில், எத்தனாலில் 12.4 பிஎச்பி பவரையும், 13.3 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். அதாவது, எத்தனாலில் மாறுபட்ட திறனை வெளிப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. மற்றபடி பிரேக்கி, பைக்கின் எடை உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
விலை (Price)
பிரேசிலில் இந்த பைக்கின் விலை 16,990 ரியல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.69 லட்சம் ஆகும்.
மேலும் படிக்க
பைக் பிரியர்களுக்கு குட் நியூஸ்: மீண்டும் வருகிறது யமஹா RX 100!