யமஹா நிறுவனம் தனது பிரபலமான ஆர்எக்ஸ் 100 பைக்கை மீண்டும் புதிய வடிவமைப்பில் மார்கெட்டிற்கு கொண்டு வர முடிவு செய்திருந்தது. தற்போது அந்த பைக் குறித்த மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
யமஹா ஆர்எக்ஸ் 100 (Yamaha RX 100)
புதிதாக வரப்போகும் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் அந்த நிறுவனத்தின் குறைந்த விலை பைக்காக விற்பனைக்கு வரும் எனத் தெரியவந்துள்ளது. இந்த பைக்கின் வடிவமைப்பில் பழைய பைக்கின் டிசைனை மேலும் மேம்படுத்தி தற்போதைய இளைஞர்களைக் கவரும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் முதல் வீல் வரை பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. பழைய பைக்கை விட புதிய தலைமுறை ஆர்எக்ஸ்100 பைக்கில் நவீனமான ஃப்யூயல் இன்ஜெக்டர் வசதி கொண்ட முன்பைவிட அதிக பவர் கொண்ட இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது போக பைக்கில் எல்இடி டிஆர்எல்கள், எலெக்ட்ரிக் ஸ்டார்ட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென் கன்சோல் உள்ளிட்ட விஷயங்கள் இடம் பெறவுள்ளன. இந்த பைக் முற்றிலுமாக புதிய பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படவுள்ளது.
விலை (Price)
பைக்கின் வீலை பொருத்தவரை வயர்-ஸ்போக் வீல்கள் கொடுக்கப்படவுள்ளன. இந்த பைக்கின் சஸ்பென்சனை பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்க்கம் ட்வின் ஷாக் அப்சர்பர்கள் கொடுக்கப்படவுள்ளன. பிரேக்கிங்கை பொருத்தவரை முன் பக்க வீலில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்க வீலில் டிரம் பிரேக்கும் வழங்கப்படவுள்ளன. இதுவரை வெளியான தகவலின்படி இந்த ஆர்எக்ஸ் 100 பைக்கில் 125 சிசி இன்ஜின் பொருத்தப்படும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
நமக்குக் கிடைத்த தகவலின்படி இந்த பைக் வரும் 2023ம் ஆண்டு இறுதியிலோ அல்லது 2024ம் ஆண்டு துவக்கத்திலோ வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் மார்கெட்டிற்கு வரும் போது ரூ1.25 முதல் 1.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கலாம். குறைந்த விலையில் விற்பனைக்கு வருவதால் இந்த பைக் வெளியாகும் போது இதன் விற்பனை மேலும் அதிகமாகும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
பணத்தை சேமிக்க நினைப்பவரா நீங்கள்? இந்த திட்டம் தான் பெஸ்ட் சாய்ஸ்!