Others

Friday, 17 June 2022 12:32 PM , by: Elavarse Sivakumar

வாட்சப்பிலேயே 30 நொடிகளில் கடன் வாங்கும் திட்டத்தை CASHe நிறுவனம் தொடங்கியுள்ளது. அவசரத் தேவைக்கு கடன் பெறத் தவிக்கும் சூழ்நிலையில், இந்தக் கடன்வசதி பெரிதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏதாவது எதிர்பாராத இக்கட்டானச் சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, பணத்தேவையை நிவர்த்தி செய்யக் கடன் பெரிதும் உதவுகிறது. ஆனால், அந்தக் கடனும், உங்கள் கையில் உள்ள செல்போன் மூலமே, எந்த ஆவணங்களும் இல்லாமல் கிடைக்கும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் வெறும் 30 நொடிகளில் கடன் வழங்குவதற்கான திட்டத்தை வாட்சப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்சப் வணிக பயனாளிகள் (Whatsapp Business users) மட்டுமே இந்த கடனை பெற முடியும். CASHe என்ற முன்னணி கடன் நிறுவனம் இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.

ஆவணங்கள் வேண்டாம்

இதன் கீழ் வெறும் 30 நொடிகளில் கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். மேலும், கடன் பெறுவதற்கு எந்தவொரு ஆவணங்களும் சமர்ப்பிக்க தேவையில்லை. உங்களிடம் வாட்சப் மட்டும் இருந்தாலே போதுமானது.

கடன் பெறுவது எப்படி?

உங்கள் மொபைலில் 8097553191 எண்ணை பதிவு செய்துகொள்ளவும்.
இந்த எண்ணுக்கு வாட்சப்பில் 'Hi' என மெசேஜ் அனுப்பவும்.
இதைத்தொடர்ந்து கடன் தொடர்பான தகவல்கள் உங்களுக்கு வரும். இந்த சேவை எல்லா நாட்களும் 24 மணி நேரமும் உண்டு.

எவ்வளவு கடன்?

உங்களது விவரங்கள் அனைத்தும் ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக முழுவதுமாக சரிபார்க்கப்படும். பின்னர் உங்களுக்கு எவ்வளவு தொகை வழங்குவது என்பதும் முடிவு செய்யப்படும். இதன் அடிப்படையில் நீங்கள் எவ்வளவு கடன் பெறலாம் என்ற தகவல் உங்களிடமே சொல்லப்படும்.

மேலும் படிக்க...

ரேசன் கடை ஊழியர்களுக்கு 14%அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் யூரியாத் தட்டுப்பாடு- குறுவை சாகுபடியில் சிக்கல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)