Now Get The Corona Vaccine Certificate On WhatsApp
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்தியாவில் இப்போது ஆதார் பான் அட்டைகளை போலவே கொரோனா தடுப்பூசி சான்றிதழும் கட்டாயமாகி வருகிறது. வெளியூர் பயணங்கள், ஹோட்டல்களில் தங்கும் போது கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ்கள் இல்லாமல் பயனர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று( (Coronavirus) அலையின் காரணமாக பொது மக்களுக்கு தடுப்பூசி (Corona Vaccine) செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில நாடுகளில் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவைசியமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது பிற மாநிலங்களுக்கு செல்லவும் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இரண்டு தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்ட சான்றிதழுடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை இப்போது சில நோடிகளில் வாட்ஸ் அப் மூலம் பெற்றுக்கொள்வதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்பாடுச் செய்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ்களை எளிதாக எவ்வாறு பெறலாம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், தற்போது அதற்கான எளிமையான வழிமுறையை மத்திய சுகாதாரத்துறை அலுவலகம் வெளியிட்டது.
* கோவிட் தொடர்பான சான்றிதழ்களை பெற மக்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு மை கவர்ன்மென்ட் கொரோனா ஹெல்ப் டெஸ்க் என்ற MyGov Corona Helpdesk வாட்ஸ்அப் செயல்பாட்டை பயன்படுத்தலாம்.
* MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் வாட்ஸ்அப் எண் +91 9013151515-ஐ உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் சேர்க்க வேண்டும்.
* பின்னர் நீங்கள் MyGov சாட் பக்கத்தை பெறுவீர்கள். அதில், நீங்கள் Download Certificate என டைப் செய்து அனுப்பவேண்டும்.
* பின்னர் வாட்ஸ்அப்பில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஆறு இலக்க OTP-ஐ பெறுவீர்கள்.
* OTP வந்தவுடன் அதனை சாட் பக்கத்தில் அனுப்பவும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பெயரை ஒரே எண்ணில் பதிவு செய்திருந்தால், வாட்ஸ்அப் உங்களுக்கு நபர்களின் பட்டியலை அனுப்பும் மற்றும் தேர்வு செய்யும்படி ஆப்ஷனை வழங்கும்.
* நீங்கள் பதிவு செய்த நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒன்று, இரண்டு அல்லது மூன்று போன்ற விருப்பங்கள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் சான்றிதழ் பெற விரும்பும் சான்றிதழ் எண்ணை அதில் டைப் செய்து அனுப்பவேண்டும்.
* பின்னர் அந்த சாட்பாக்ஸ் உங்களுக்கு COVID-19 தடுப்பூசி சான்றிதழை வழங்கும் . நீங்கள் அதை உங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க:
வீட்டுக் கடனுக்கான வட்டி குறைவு: 15 வங்கிகள் அறிவிப்பு!