இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 5 February, 2022 9:56 AM IST

நாகை மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த வேட்பாளரிடம், நீங்கள் இறந்துவிட்டதாகக்கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்தவர் உயிருடன் வந்தது கண்டு மற்றவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பதவிக் காலம் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் புதிதாக உருவான 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவு

இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கிய நிலையில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி, நாகப்பட்டினம் நகராட்சியில் உள்ள 36 வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திமுக, அதிமுக, தேமுதிக, இ.கம்யூ மற்றும் விஜய் மக்கள் மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த ஏராளமான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதேபோல் நாகை நகராட்சி 4வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமிர்தவள்ளி (33) வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவரது பெயர், வரிசை எண் உள்ளிட்டவைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அமிர்தவள்ளி எதற்காக நீக்கம் செய்யப்பட்டது? என கேட்டார். அதற்கு அதிகாரிகள், ‘நீங்கள் இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத சிறிது நேரத்துக்கு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றார். முன்னதாக அவர் கூறும்போது, பட்டியலில் இருந்த எனது பெயரை அதிகாரிகள் திட்டமிட்டு நீக்கியதோடு, இறந்தவர் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்றுக் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க...

கோழிக்கொண்டை பூ சாகுபடிக்கு மானியம் ?

அச்சதலான 10 அடி தோசை - சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு!

English Summary: You're dead - the shock that awaited the candidate!
Published on: 05 February 2022, 09:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now