1. விவசாய தகவல்கள்

விவசாயிகளே.. வாழைத் தார்களை இப்படி பராமரித்தால் லாபம் நிச்சயம்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Banana Tree Maintenance (pic: ICAR NRCB)

வாழை சாகுபடியில் தரமான வாழைத்தார்கள் உற்பத்தி செய்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நேந்திரன், கிராண்ட்நயன், செவ்வாழை,  நெய் பூவன், பூவன் போன்ற ரகங்களில் சருகுகள் மற்றும் பாலிப்ரோபோலின் உறையிடப்பட்ட தரமான வாழைத்தார்களுக்கு சந்தைகளில் நல்ல விலை கிடைக்கிறது.

உறையிடப்படாத வாழைத்தார்களில் காய்பேன் மற்றும்  சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் ஏற்பட்டு அதன் தரம் முற்றிலும் குறைகிறது. இதனால் தரமான விலையை விவசாயிகள் சந்தையில் பெறமுடியாத சூழ்நிலை உள்ளது. பாரம்பரிய மற்றும் நவீன முறைகளில் வாழைத்தாரினை உறையிடும் முறை குறித்த தகவலினை ஐ. சி .ஏ. ஆர் - தேசிய வாழை ஆராய்ச்சி மைய வழங்கியுள்ளார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு-

பாரம்பரிய முறைகள் : 1.சருகு கட்டுதல்

பொதுவாக தமிழகத்தில் இம்முறை தொன்று தொட்டு வாழை விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. வாழையின் அனைத்து சீப்புகளும் விரிந்த ஒரு வாரத்திற்கு பிறகு அந்த தோட்டத்தில் உள்ள காய்ந்த வாழைப்பட்டையின் சருகு இலையே வாழைத்தாரின் கொன்னை முதல் வாழைத்தாரின் இடையிடையே சுற்றி கடுமையான சூரிய வெப்பத்திலிருந்து காப்பதுடன் வாழைத்தாரின் பளபளப்பு கூடுகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகர்கோயில் போன்ற பகுதிகளில் காய்ந்த வாழை இலை சருகுகளுக்கு பதிலாக தென்னை மட்டையை முடைந்து வாழைத்தார்களுக்கு உறையாக பயன்படுத்துகின்றனர். மேலும் வாழை மரத்தின் கடைசியில் வரும் கண்ணாடி இலையை கொன்னையில் வைத்து கட்டி விடுவதினால் கொன்னை அழுகல் நோயும் தடுக்கப்படுகிறது. மேலும், இம்முறையில்  வாழைத்தார்  பராமரிப்பிற்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூபாய் ஐந்தாயிரம் மட்டுமே செலவாகிறது.

நன்மைகள்:

  • சருகு கட்டும் முறை மிகவும் செலவு குறைந்தது மற்றும் எளிதானது.
  • மேலும் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

பாதிப்புகள்: சருகு கட்டும் முறையில் மழை மற்றும் குளிர்காலங்களில், உள்ளே ஈரப்பதம் கூடுவதால் காய்ந்த சருகுகள் மூலம் பூஞ்சாண நோய்கள்  மற்றும் பூச்சிகள் தாக்க வாய்ப்புகள் உள்ளது.

2.தென்னை ஓலைகளை கொண்டு வாழைத்தார் உறையிடும் முறை

இம்முறையில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதியில் விளைவிக்கப்படும் மட்டி மற்றும் பூவில்லா சுண்டன் போன்ற ரகங்களுக்கு தென்னை ஓலைகளை பின்னி அதனை வாழைத்தார்களுக்கு  உறையிடுகின்றனர்.

நன்மைகள்

  • இம்முறையில் வாழைத்தார்கள் கடுமையான சூரிய வெளிச்சம் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
  • நல்ல பொலிவான தரம் உள்ள தார்களை பெற முடியும்.
  • இதன் மூலம் வாழைத்தவர்களின் எடை ஒன்று முதல் ஒன்றரை கிலோ வரை அதிகரிக்கிறது.

பாதிப்புகள்

  • இம்முறையில் வாழைத்தார்களுக்கு மருந்து தெளிப்பது கடினமானது.
  • உறையிட்ட பின் வாழைப்பழங்கள்  பழுப்பதை கண்டுபிடிப்பது சிரமம்.
  • இம்முறையில் வாழைத்தார்களில் பூஞ்சாண நோய்கள் மற்றும் பூச்சிகள் பரவ வாய்ப்பு உள்ளது.

3.பிளாஸ்டிக் சாக்கு பைகளை கொண்டு வாழைத்தார் உறையிடும் முறை

இம்முறையில் கேரள மாநிலத்தில் திருச்சூர் மற்றும் கண்ணாரா ஆகிய பகுதிகளில் நேந்திரன் வாழைக்கு சாக்கு பைகளை கொண்டு விவசாயிகள் வாழைத்தார்கள் உறையிடுகின்றனர்.

நன்மைகள்

  • இம்முறையில் வாழைத்தார்கள் கடுமையான சூரிய வெளிச்சம் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
  • நல்ல பொலிவான தரம் உள்ள தார்களை பெற முடியும்.
  • இதன் மூலம் வாழைத்தவர்களின் எடை ஒன்று முதல் ஒன்றரை கிலோ வரை அதிகரிக்கிறது.

பாதிப்புகள்

  • இம்முறையில் வாழைத்தார்களுக்கு மருந்து தெளிப்பது கடினமானது.
  • உறையிட்ட பின் வாழைப்பழங்கள்  பழுப்பதை கண்டுபிடிப்பது சிரமம்.
  • இம்முறையில் வாழைத்தார்களுக்கு உள்ளே ஈரப்பதம் கூடுவதால் பூஞ்சாண நோய்கள்  மற்றும் பூச்சிகள் தாக்க வாய்ப்புகள் உள்ளது.

நவீன முறைகள்

பாலிபுரோபோலின்

சமீப காலங்களில் வாழைத்தார்களுக்கு, சருகுகளுக்கு பதிலாக  17 ஜி.எஸ்.எம் தடிமன் உடைய நெய்யப்படாத வெள்ளை மற்றும் நீல நிற  பாலிப்ரோபோலின் உறைகள் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக கிராண்ட்நயன் போன்ற ஏற்றுமதி செய்யும் வாழை விவசாயிகளுக்கு இம்முறை பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.இதன் மூலம் வாழைத்தார்களை அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர்ச்சியான    சூழ்நிலைகளில் பாதுகாக்கவும் மிகவும் பளபளப்புடன் சிறு புள்ளிகள்  மற்றும்  சிராய்ப்புகள் கூட இல்லாமல் தரமான வாழைத்தார்கள் உற்பத்தி செய்ய முடியும். இம்முறையில் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 8000 வரை செலவாகும்.

நன்மைகள்:

  • உறையிடுதல் மூலம் சற்று செலவு அதிகமாக இருந்தாலும் குறிப்பாக கிராண்ட்நயன் வாழை போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரகங்களுக்கு வெள்ளை மற்றும் நீல நிற பாலிபுரோபோலின் உறைகளை இடுவது மிகவும் சிறந்தது. இதனால் ஏற்றுமதிக்கு தேவையான தரமான தார்கள்/ சீப்புகள் கிடைக்கும்.

Read also: வேளாண் விஞ்ஞானிகள் நியமனத்தில் முறைகேடு செய்ததா ICAR?

  • பாலிபுரோபோலின் நெய்யப்பட்ட துணிகளின் மூலம் வாழைத்தார் உறையிடுவதனால் முதிர்ச்சியடையும் காலம் குறைகிறது. மேலும் மைக்ரோ கிளைமேட் எனப்படும் குறைந்த வெப்பநிலை  காணப்படுவதால் வாழைத்தார்களின் பொலிவு மற்றும் கூடுதல் விலை சந்தைகளில் பெற முடியும்.
  • இதன் மூலம் வாழைத்தவர்களின் எடை இரண்டு முதல் மூன்று கிலோ வரை அதிகரிக்கிறது.
Banana Tree (pexels)

இந்த தகவலினை தொகுத்து வழங்கியவர்கள்:

கே.என்.ஷிவா, வ.குமார், ப.சுரேஷ்குமார், கி.காமராஜு, பெ.ரவிச்சாமி, *பபிதா, இரா.செல்வராஜன் (ஐ.சி.ஏ.ஆர் - தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தோகமலை ரோடு, தாயனூர் அஞ்சல், திருச்சிராப்பள்ளி- 620 102, *களஅதிகாரி, வி.எஃப்.பி.சி.கே., திருச்சூர், கேரளா). மேலும் தகவலுக்கு தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தினை தொடர்புக் கொள்ளலாம். தொலைபேசி எண்: 0431-2618125 ,மின்னஞ்சல் : director.nrcb@icar.gov.in .

Read more:

semmozhi poonga: ஒரே இடத்தில் காணக்கிடைக்காத மலர்கள்- சென்னை மக்களுக்கு நல்ல வாய்ப்பு!

OTP காய்களின் விலை ஏன் கட்டுக்குள்ளே இருக்கு? மில்லினியர் விவசாயி சிவதேவன் நேர்காணல்

English Summary: Farmers Maximize Profits with These Banana Tree Maintenance Tips Published on: 02 January 2025, 05:00 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.