1. வாழ்வும் நலமும்

Anti Aging: சரும சுருக்கங்களை போக்க, இந்த பழச்சாறுகள் போதும்

Deiva Bindhiya
Deiva Bindhiya

Anti Aging: To cure skin wrinkles, this fruit juice is enough

Anti Aging ஜூஸ்: அவசர வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், நாம் அடிக்கடி டென்ஷனுக்கு ஆளாகிறோம், இதன் விளைவு நம் முகத்தில் தெரிய ஆரம்பிக்கிறது. சத்துக்கள் இல்லாததாலும், உடலில் மாசு ஏற்படுவதாலும் முகத்தில் முதுமையின் அடையாளமாக சுருக்கங்கள் தெரிகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் உங்கள் சருமத்தை முழுமையாக நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டியது, அவசியமாகிறது. தினசரி உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அப்போதுதான் ஆண்டி ஏஜிங் அதாவது மூப்பு எதிர்ப்பு செயல்முறை துரிதப்படுத்தப்படும் என்பது குறிப்பிடதக்கது. சில இயற்கையான உணவுகளின் மூலம் உடலையும், குறிப்பாக முகத்தை நீண்ட காலத்துக்கு இளமையாக ஆரோக்கியமாக வைக்கலாம். அந்த வகையில், நமக்கு இளமையான முகத்தை அளிக்கக்கூடிய ஐந்து பழரச வகைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

சிறந்த ஆன்டி ஏஜிங் ஜூஸ்கள்(Best Anti Aging Juices):

1. கேரட் சாறு (Carrot Juice)

கேரட் ஒரு ஆண்டி ஆக்சிடெண்டாக செயல்படும், என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கேரட்-இல் போதுவாக அதிக அளவு லுடீன் காணப்படுகிறது. இது மூளைக்கு நன்மை பயக்கும் என்பது குறிப்பிடதக்கது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உடல் ஆரோக்கியத்துக்கு, அதிகப்படியான நன்மைகளை வழங்குகிறது. கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சருமத்தின் பொலிவு அப்படியே இருக்கும், என அனைவரும் அறிவுறுத்துகின்றனர்.

2. மாதுளை சாறு (Pomegranate Juice)

மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும் என்பதால் இது ஒரு ஆரோக்கியத்தின் பொக்கிஷம், என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தவிர மாதுளம்பழம் புற்று நோயை தடுக்க வல்லது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடியது. மேலும் ரத்த சுத்திகரிப்பில் தொடங்கி ரத்த பிரச்சனைகளுக்கு சிறப்பான தீர்வாக, மாதுளை அமையும் என்பது குறிப்பிடதக்கது.

3. திராட்சை சாறு (Grapes Juice)

கருப்பு திராட்சையில் கரோட்டினாய்டு சேர்மங்கள் அதிகம் காணப்படுகின்றன. எனவே, அதன் சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால், அது ஆண்டி ஏஜிங் பானமாக செயல்படும். இது தவிர, உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை, இது அதிகரிக்க உதவுகின்றது. இதனால், இதயம் தொடர்பான நோய்கள் பிரச்சனைகளையும் தடுக்க வல்லது.

மேலும் படிக்க: தென்னையில் ஊடுபயிர் சாகுபடி- ரூ.10,500 மானியம்!

4. பீட்ரூட் சாறு (Beetroot Juice):

பீட்ரூட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதன் சாறு உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. போதுவாகவே, பீட்ரூட் வைத்து நிறைய சரும பிரச்சனைகளுக்கான தீர்வுகள் டிப்ஸ்களாக பல்வேறு தளங்கள் வழங்கிவருகின்றன. அந்த வகையில் முகத்தில் வயதின் தாக்கத்தை குறைக்க இது உதவும் என்பதில் குழப்பம் வேண்டாம்.

இவற்றைத் தவிர முதுமையிலும் இளமையாக தெரிய, இந்த ஐந்து பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள், நிச்சயம் வித்தியாசத்தப் பார்க்கலாம்:

  • தயிர்
  • மீன்
  • தர்பூசணி
  • வெள்ளரிக்காய்
  • அவகாடோ

மேலும் படிக்க:

விவசாயிகளுக்கான Nokia 4G Smartphone: ரூ. 549 வாங்கலாம்!

முட்டை விலை அதிரடி உயர்வு! மக்கள் அவதி!!

English Summary: Anti Aging: To cure skin wrinkles, this fruit juice is enough

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.