சிக்கனுடன் ஒருபோதும் சாப்பிடக்கூடாத உணவுகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது. சிக்கன் சாப்பிடும்போது எந்ந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியமான ஒன்றாகும்.
பால் மற்றும் கோழி உண்பது
கோழியை பாலுடன் சாப்பிடுவது விஷத்து நிகரானது எனத் தகவல்கள் கூறுகின்றன. பாலும் கோழியும் சேர்ந்து உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே, உடலில் ஒவ்வாமை ஏற்படலாம். பாலையும் கோழிக்கறியையும் சேர்த்து சாப்பிடுவதும் சரும பிரச்சனைகளை உண்டாக்கும். கோழிக்கறியுடன் பால் சாப்பிடுவதால் உடலில் சொறி, வெள்ளைப்புள்ளிகள், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.
இன்னும் சிலர் எல்லா வகை உணவுகளுடனும் தயிர் சேர்த்து சாப்பிடுவார்கள். தயிர் எல்லாவற்றின் சுவையையும் அதிகரிக்கிறதுதான். ஆனால் சிலர் சிக்கனுடன் தயிரையும் சாப்பிடுவார்கள். தயிரின் விளைவு குளிர்ச்சியாகவும், கோழியின் விளைவு சூடாகவும் என இருந்து முன்னுக்குப்பின் முரணாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கோழி மற்றும் தயிர் ஒன்றாக சாப்பிடுவது செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துமெனக் கூறப்படுகிறது.
மீன் மற்றும் கோழி உண்பது
சிக்கனுடன் மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல எனக் கூறப்படுகிறது. கோழி மற்றும் மீன் இரண்டிலும் புரதம் நிறைந்துள்ளது, ஆனால் இரண்டிலும் வெவ்வேறு வகையான புரதங்கள் காணப்படுகின்றன. இந்த புரதம் உடலில் வினைபுரியும். இதனால், உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், சிக்கன் மற்றும் மீனை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது அல்ல எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments