1. செய்திகள்

ஏஐ உதவியுடன் வீட்டுக்குள் விவசாயம்; ஹைட்ரோபோனிக்ஸில் புதுநுட்பத்தை புகுத்திய சென்னை ஸ்டார்ட்அப்

Harishanker R P
Harishanker R P

வீட்டைச் செடி, கொடியென பச்சை பசேலென பசுமையாக வைத்திருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? மாதத்திற்கு 10 கிலோ கீரைகளையே விளைவிக்கும் வகையில் ஸ்மார்ட் ஹைட்ரோபோனிக் அமைப்புகளை உருவாக்கி உட்புற விவசாயத்தில் புதுமையை கண்டறிந்துள்ளது சென்னை நிறுவனம்.

ட்டைச் செடி, கொடியென பச்சை பசேலென பசுமையாக வைத்திருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? பெரிய இடமாக இருந்தாலும் சரி, சிறிய இடமாக இருந்தாலும் சரி, வீட்டில் செடிகள் வளர்ப்பது நிச்சயமாக ஒருவரின் மனநிலையை மேம்படுத்துவதோடு, இந்த நகர்ப்புற நிலப்பரப்புக்கு மத்தியிலும் இயற்கையின் அழகியலைச் சேர்க்கிறது. அப்பார்ட்மென்ட்களில் வசிக்கும் சிட்டிவாசிகளுக்கு அவர்களது வீடுகளுக்குள்ளே செடிகளை வளர்ப்பதை ஹைட்ரோபோனிக்ஸ் அமைப்புகள் போன்ற நவீன தோட்டக்கலை உபகரணங்கள் சாத்தியப்படுத்தியுள்ளன.

அதையும் எளிமையாக்கும் வகையில் தாவர வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை நிர்வகிக்கவும், தானியக்கமாக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஸ்மார்ட் ஹைட்ரோபோனிக் அமைப்புகளை உருவாக்கியுள்ளது 'CROPPICO'. 2024ம் ஆண்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்ட நகர்ப்புற விவசாய ஸ்டார்ட்அப் நிறுவனமான 'க்ராப்பிகோ'-வை தொடங்கினார் ஷாமில் பிச்சா.

எலக்ட்ரானிக்ஸிலிருந்து வேளாண் தொழில்நுட்பம்:

அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் மற்றும் இந்தியாவின் மின்னணுத் துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பணியாற்றிய பிறகு, வயநாடு மற்றும் கூர்க்கில் உள்ள அவரது மறைந்த மாமனாரின் காபி தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஷாமிலை வந்தடைந்தது. அப்போது கிடைத்த அனுபவம், குறிப்பாக காலநிலை மாற்றம் மற்றும் வளக் கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட பாரம்பரிய விவசாயத்தின் உள்ளார்ந்த பாதிப்புகளை அவருக்கு வெளிப்படுத்தியது.

இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய்தான் அவரை ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயத்திற்கான பாதையில் செல்லத்துாண்டியது. டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட அவரது தாயாரை ஏதேனும் ஒரு விஷயத்தில் ஈடுபாட்டுடன் வைத்திருக்க செய்வதற்கான வழிகளை தேடி அலைந்து, ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டகலையை கண்டடைந்தார்.

ஹைட்ரோபோனிக்ஸ் வேளாண் என்பது மண்ணில்லா விவசாயமாகும். தாவர வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் அனைத்தையும் நீர் மூலமாக தாவரங்களின் வேர்களுக்கு செலுத்தி விளைச்சலை மேற்கொள்ளும் நவீன முறையாகும்.

ஹோமியில் உள்ள ஸ்மார்ட் சென்சார்கள் pH அளவுகள், ஊட்டச்சத்து செறிவு, வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் ஓட்ட விகிதங்களைக் கண்காணித்து, நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட வளரும் சூழலை உறுதி செய்கிறது. இந்த ஸ்டார்ட் அப் ஒரு FarmAssist செயலியையும் உருவாக்கியுள்ளது. செயலியின் உதவியுடன் வாடிக்கையாளர்கள் அமைப்பில் தண்ணீர், ஊட்டச்சத்துக்கள், விளக்குகள் மற்றும் உரமிடுதல் (நீர்ப்பாசனம் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை நேரடியாக தாவர வேர்களுக்கு வழங்குவதற்கான ஒரு செயல்முறை) ஆகியவற்றை ஒழுங்குபடுத்தலாம்.

Croppico- ன் நோக்கம் ஒரு பொருளை விற்பனை செய்வது மட்டுமல்ல. நகர்புற நுகர்வோர்களுக்கு ப்ரெஷான, வீட்டிலே அவர்களுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதாகும், என்றார்.

Read more:

நிலையான விவசாய நடைமுறைகளுடன் நிலக்கடலை, கோதுமை, தினை மற்றும் பருப்பு வகைகள் மூலம் குஜராத் பெண் விவசாயி மாதந்தோறும் ரூ.30,000 க்கும் மேல் சம்பாதிக்கிறார்

3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்

English Summary: AI-assisted indoor farming; Chennai startup introduces new technology in hydroponics Published on: 02 April 2025, 03:30 IST

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub