1. செய்திகள்

திருமணமானவர்களுக்கு மாதம் ரூ.18,500 வழங்கும் மத்திய அரசு

T. Vigneshwaran
T. Vigneshwaran

Married Couple

மத்தியில் மோடி அரசால் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இந்த திட்டத்தில் பங்களிப்பதன் மூலம் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற்று பலனடையலாம். கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி மத்திய அரசால் இந்த பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது.

மார்ச் 31, 2023 வரை திருமணமான தம்பதிகள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து மாதந்தோறும் ஓய்வூதியத்தை பெற்று பயனடைந்து கொள்ளலாம். கணவன்-மனைவி இருவரும் விரும்பினால், 60 வயதிற்குப் பிறகு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால் (எல்ஐசி) இயக்கப்படும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகும். கணவன்-மனைவி இருவரும் 60 வயதைத் தாண்டியிருந்தால், அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளலாம். முன்னர் இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.7.5 லட்சமாக இருந்த நிலையில் தற்போது இதன் வரம்பு இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு வழங்கும் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது ​​மூத்த குடிமக்கள் பலரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட திருமணமான தம்பதியர்கள் இந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

கணவன்-மனைவி இருவரும் தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தமாக ரூ.30 லட்சத்தை பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் உங்களுக்கு 7.40 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. உங்கள் மொத்த முதலீட்டின் ஆண்டு வட்டி ரூ. 2,22,000, அதை 12 மாதங்களில் பிரித்தால் உங்களுக்கு ரூ.18500 ஓய்வூதியமாக கிடைக்கும்.

இந்த திட்டத்தில் ஒருவர் மட்டும் கூட முதலீடு செய்யலாம், இப்போது நீங்கள் இந்த திட்டத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டு வட்டி ரூ.1,11,000 வரும், இதில் உங்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.9250 கிடைக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும், முதலீடு செய்த 10 ஆண்டுகளுக்கு பின்னரிலிருந்து உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெறும்.

மேலும் படிக்க:

நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கணுமா?

ஒரு முறை சார்ஜ் போட்டால் 307 கி.மீ மைலேஜ்

English Summary: The central government will give Rs.18,500 per month to married people

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.