ஊட்டியை போல மாறப்போகும் திருப்பூர் பற்றிய செம சூப்பர் அறிவிப்பை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளது மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அவலாஞ்சி ஏரி, தொட்டபெட்டா சிகரம், ஊட்டி தாவரவியல் தோட்டம், ஊட்டி ஏரி, நீலகிரி மலை ரயில் மிகவும் பிரசித்தி பெற்றவை என்பதால் ஊட்டியின் அனுபவத்தை பெற கோடைக்காலத்தில் மக்கள் அனைவரும் அலைமோதி வருகின்றனர். இந்நிலையில் தான் ஊட்டியைபோல் திருப்பூர் மாற இருப்பதாக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அளித்து இருக்கும் பேட்டி மாவட்ட மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.
திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள நஞ்சராயன் குளம் மற்றும் பறவைகள் சரணாலயத்தை மாநில வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நஞ்சராயன் குளத்திற்கு வரும் வெளிநாட்டு பறவை இனங்கள் குறித்து நவீனக் கருவிகள் மூலம் பார்வையிட்டு அதிகாரிகளுடன் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டார் எனக் கூறப்படுகிறது. அப்போது அவர் சில முக்கிய தகவல்களைக் கூறியுள்ளார்.
இதன் பின்பு, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது: திருப்பூர் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் இருக்கின்ற நஞ்சராயன் குளத்துக்கு வெளிநாட்டு பறவையினங்கள் 126 வகை பறவைகள் வந்து செல்லக்கூடிய வகையில் அதற்கு ஏற்றார் போல் நஞ்சராயன் குளம் அமைந்து இருக்கிறது.
தமிழக அரசு 17வது சரணாலயமாக இதனை அறிவித்து 7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. நஞ்சராயன் குளமாக முழுமையான பொதுமக்கள் பார்வையிட்டு பயன்படுத்தக்கூடிய இடமாக பயன்பாட்டிற்கு கொண்டு வரத் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, மாநகராட்சி சார்பாக மேலும் ஒரு சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கும் பணி நடைபெற்று வருகின்றது. பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்ட நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட நிலத்தை மீண்டும் தமிழக அரசு பறவைகள் சரணாலயத்திற்காக கையகப்படுத்த தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
TNEB: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்! மின்சாரத்துறை அமைச்சர் தகவல்!!
Share your comments