Blogs

Friday, 17 June 2022 12:51 PM , by: Elavarse Sivakumar

வீட்டில் கரப்பான் பூச்சி வளர விடுவதற்கு 1.5 லட்சம் ரூபாய் வழங்குகிறது ஒரு தனியார் நிறுவனம். இந்த நிறுவனத்தின் புதிய முயற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கரப்பான் பூச்சி என்ற வார்த்தையே நமக்கு ஒருவித அறுவறுப்பை உருவாக்குகிறது. அதன் காரணமாகவே, இன்னமும் பெண்களில் சிலர் கரப்பான் பூச்சி என்ற வார்த்தையைக் கேட்டாலே அலறுகின்றனர்.
இப்படி அலறுபவர்களுக்குதான் இந்தச் செய்தி பேரதிர்ச்சியாக இருக்கும்.

ஆடு, மாடும், கோழி வளர்த்து பணம் சம்பாதித்தவர்களை பாத்திருக்கிறோம். ஆனால், வீட்டில் கரப்பான்பூச்சி வளர்ப்பதற்கு லட்சக்கணக்கில் பணம் தருவோம் என யாராவது கூறினால் சும்மா இருக்க முடியுமா? இப்படி ஒரு ஆஃபரை அறிவித்திருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம்.
அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் இயங்கி வருகிறது தி பெஸ்ட் இன்ஃபார்மர்’ (The Pest Informer) என்ற பூச்சிக்கொல்லி நிறுவனம்.

ரூ.1.5 லட்சம்

இந்நிறுவனம், வீட்டில் கரப்பான்பூச்சியை வளர விடுவோருக்கு 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.வீட்டில் 100 கரப்பான் பூச்சிகளை நுழைய விட்டு அவற்றை பெருக விட்டால் போதும், அதற்காக 2000 டாலர் (1.5 லட்சம் ரூபாய்) வழங்கப்படும் என தி பெஸ்ட் இன்ஃபார்மர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய பூச்சிக்கொல்லி அமைப்பு எப்படி வேலை செய்கிறது என்பதை பரிசோதிப்பதே இந்த ஆஃபரின் நோக்கம்.

100 கரப்பான் பூச்சிகள்

இதற்காக 5 முதல் 6 பேர் தங்கள் வீட்டில் 100 கரப்பான் பூச்சிகள் நுழைய அனுமதித்தால் போதும் என பெஸ்ட் இன்ஃபார்மர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மொத்தம் 30 நாட்களுக்கு இந்த சோதனை நடைபெறும்.

இந்த சோதனை காலத்தில் கரப்பான்பூச்சிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கண்டறிவதே முதன்மையான நோக்கம். ஒரு மாதம் முடிந்தபின் வீட்டில் உள்ள கரப்பான்பூச்சிகளை பெஸ்ட் இன்ஃபார்மர் நிறுவனமே ஆள் வைத்து காலி செய்துவிடுவார்கள்.

நிபந்தனை

வீட்டு உரிமையாளர் 21 வயதை தாண்டியவராக இருக்க வேண்டும் என ஒரு நிபந்தனையையும் பெஸ்ட் இன்ஃபார்மர் நிறுவனம் விதித்துள்ளது.

மேலும் படிக்க...

தமிழகத்தில் யூரியாத் தட்டுப்பாடு- குறுவை சாகுபடியில் சிக்கல்!

ரேசன் கடை ஊழியர்களுக்கு 14%அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு உத்தரவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)