1. தோட்டக்கலை

கவரும் ஸ்ட்ராபெரி - விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Attractive Strawberry - Farmers happy with purchase price hike!

கோத்தகிரியில் ஸ்ட்ராபெரி பழங்களின் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

ஸ்ட்ராபெரி சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பச்சை தேயிலை விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. அப்போது தேயிலைக்கு மாற்றாக கொய்மலர் விவசாயம் செய்ய விவசாயிகள் களம் இறங்கினர். மேலும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொய்மலர் சாகுபடியில் போதிய லாபம் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து குடில்களில் மேரக்காய், பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் மற்றும் ஸ்ட்ராபெரி பழங்களை பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது ஸ்ட்ராபெரி பழங்களுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விளைந்த ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு, வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

நாற்று நடவு

இதுகுறித்து தூனேரி கிராம விவசாயி பாபு கூறியதாவது:- ஸ்ட்ராபெரி நாற்றுகள் வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. குடில்களில் மாட்டு சாணம், தசகாவ்யம், பஞ்சகாவ்யம் ஆகிய இயற்கை உரங்களை கலந்து மண்ணை நன்கு பதப்படுத்தி நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது.

கிலோ ரூ.350

சொட்டுநீர் பாசனம் மூலம் நாற்றுகள் பராமரிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடைக்கு தயாரானது. தற்போது ஒரு கிலோ ஸ்ட்ராபெரி ரூ.350 வரை விற்பனையாகிறது. வியாபாரிகள் விளைநிலங்களுக்கு நேரில் வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர்.
ஸ்ட்ராபெரி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மராட்டியத்தில் நாற்று ஒன்றுக்கு ரூ.5 மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் உரம், சொட்டு நீர் பாசனத்திற்கு என தனித்தனியாக மானியங்கள் வழங்கப்படுகிறது. எனவே, ஸ்ட்ராபெரி விவசாயத்தை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நீலகிரி கோத்தகிரி, கோத்தகிரியில் ஸ்ட்ராபெரி பழங்களின் சுவை, வெளி மாநிலங்களைத் தாண்டி, வெளிநாட்டு வாடிக்கையாளர்களையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

தமிழகத்தில் யூரியாத் தட்டுப்பாடு- குறுவை சாகுபடியில் சிக்கல்!

ரேசன் கடை ஊழியர்களுக்கு 14%அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு உத்தரவு!

English Summary: Attractive Strawberry - Farmers happy with purchase price hike! Published on: 17 June 2022, 12:17 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.