மனைவி மூன்றாவதாக ஒருவருடன் ஓடிவிட்டதால் அவரது முன்னாள் இரண்டு கணவர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றேத் தெரியாமல், போலீசார் விழிப்பிதுங்கியுள்ளனர்.
மகாரஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இரண்டு நபர்கள் வந்து வித்தியாசமாக புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் சிரிப்பலைகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போலீஸாருக்கு தலைவலி
அதாவது அந்த இரண்டு நபர்களும் ஒன்றாக காவல் நிலையத்திற்கு வந்து தங்கள் இருவரது மனைவி மூன்றாவதாக வேறொருருவருடன் ஓடிவிட்டதாகவும் அவரை மீட்டு தருமாறும் கோரி போலீசில் புகார் அளித்தனர். இதனை கேட்ட போலீசாருக்கு தலையேச் சுற்ற ஆரம்பித்துவிட்டது. பின்னர் சுதாரித்துக்கொண்டு, இதுகுறித்து முழுமையாக இருவரிடமும் முதலில் விசாரணை நடத்தினர்.
அந்த பெண் அவரது முதல் கணவரை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார், இவர்களின் திருமண பந்தத்துக்கு அடையாளமாக இரண்டு குழந்தைகள் உள்ளது.
2 கணவர்கள்
அந்த பெண்ணுக்கு சில வருடங்கள் கழித்து மற்றொரு நபருடன் தொலைபேசி மூலம் காதல் மலர்ந்துள்ளது. இதனால் திருமணமான நான்கு ஆண்டுகளில் முதல் கணவனுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப்போய் தொலைபேசி நண்பரைக் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார். முதல் கணவர் ஆசாரி வேலை செய்கிறார், இரண்டாவது கணவர் பைபர் தொழில் செய்து வருகிறார்.
இரண்டாவது கணவருடன் சில மாதங்கள் குடும்பம் நடத்தியவர் திடீரென்று ஒரு நாள் தான் ஊருக்கு போய்விட்டு வருவதாக கூறி சென்றிருக்கிறார், சென்றவர் திரும்பி வரவேயில்லை. பிறகு தான் அவருக்கு சமூக ஊடகத்தில் மூன்றாவதாக ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் ஓடிப்போனது வெளிச்சத்திற்கு வந்தது.
புகார்
மனைவியை பிரிந்த சோகத்தில் முதல் கணவர் முழுநேர குடிகாரனாக மாறிவிட்டார், இரண்டாவது கணவர் அவரை தேடி சென்று அழைத்துவந்து, தங்களது மனைவி மூன்றாவதாக ஒருவருடன் ஓடிவிட்டார் அவரை மீட்டு தாருங்கள் என்று போலீசில் புகார் கொடுக்க வந்துள்ளனர். அந்த பெண்ணை பிடித்து இப்போது எந்த கணவருடன் சேர்த்து வைப்பது என்கிற குழப்பத்தில் போலீசார் இருந்து வருகின்றனர்.
மேலும் படிக்க...