1. வாழ்வும் நலமும்

நயன்தாராவின் ஃபிட்னஸ் சீக்ரெட் இதுதான்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
This is Nayantara's Fitness Secret!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் தாரக மந்திரம் 'குறைவாக சாப்பிட்டு, அதிகமாக வேலை செய்ய வேண்டும்' என்பதே.

திரைத்துறையைப் பொருத்தவரை, எப்போது அது நடிகர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. குறிப்பாக நடிகர்களுக்கு இருப்பதுபோல், நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் இருப்பதில்லை. இந்த விதியை உடைத்தவர் என்றால், அது நயன்தாராதான்.

விரைவில் O2

நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் உள்ளார். சமீபத்தில் இவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது. அடுத்ததாக O2 படம் வெளியாக உள்ளது.

அந்த வகையில் அதிக ரசிகர்கள் கொண்டாடும், தமிழ் திரையுலக லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பவர் நயன்தாரா. பெண்களை மையப்படுத்தும் வகையிலான கதைகளையே அதிகம் தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர் இவர். தன்னைப்பற்றி எத்தனை விமர்சனங்கள் எழுந்தாலும், அவற்றைத் தவிடுபொடியாக்கித் தொடர்ந்து சாதித்துக்கொண்டே இருக்கிறார்.

உடற்பயிற்சி

திறமையான நடிப்பை வெளிப்படுத்துவது ஒரு பக்கம் இருந்தாலும், தனது உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார். இதன் காரணமாகவே இவர் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இவர் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வருகிறார், மேலும் தினமும் முறையான உணவுமுறையையும் பின்பற்றி வருகிறார். இந்த இரண்டும் தான் இவரது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. தீவிர உடற்பயிற்சி மட்டுமே இவரது அழகான உடல் வடிவத்திற்கு காரணமில்லை.

யோகா

இவரது உடலை அழகான வடிவமாக மாற்றுவதில் மற்றும் பராமரிப்பதில் யோகா உதவுகிறது, உடற்பயிற்சியுடன் சேர்த்து தவறாமல் நயன்தாரா தினமும் யோகா செய்து வருகிறார். தனது உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க தினமும் நிறைய தண்ணீர், தேங்காய் தண்ணீர், வைட்டமின் சி நிறைந்த பழச்சாறுகள் போன்றவற்றை அதிகமாக பருகிறார். இதைத் தவிர்த்து இயற்கையான இனிப்பு நிறைந்தவற்றை மட்டும் தான் உண்கிறார். மற்றபடி இனிப்பு வகைகளை முற்றிலுமாக ஒதுக்கிவிடுகிறார்.

தாரக மந்திரம்

இவை அனைத்தையும் விட, நயன்தாராவின் தாரக மந்திரம் 'குறைவாக சாப்பிட்டு, அதிகமாக வேலை செய்ய வேண்டும்' என்பதே. இதனை அவர் பின்பற்றுவதால் தான் இன்றளவும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருந்து வருகிறார்.

மேலும் படிக்க...

இதய ஆரோக்கியத்திற்கு இதைச் செய்தால் போதும்- சிம்பிள் பயிற்சி!

பப்பாளி சுகர் நோயாளிகளுக்கு சூட் ஆகுமா?

English Summary: This is Nayantara's Fitness Secret! Published on: 06 June 2022, 11:48 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.