தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு தமிழரும் கொண்டாடும் தமிழர் திருநாளே பொங்கல் திருநாளாகும்.
பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கொண்டாடப்படுவது போகிப்பண்டிகை, அதன் பின் பொங்கல், பின் மாட்டு பொங்கல், அடுத்த நாள் காணும் பொங்கல் என பொங்கல் நான்கு நாட்கள் விழாவைக கொண்டாடப்படுகிறது.
முதல் நாளான போகிப்பண்டிகைக்கு, வீட்டை சுத்தம் செய்து வண்ணம் பூசுவர், பழையன கழிதலும், புதியன புகுதலும் போகிப் பண்டிகையின் சிறப்பு ஆகும். இந்த பண்டிகை மூலம், பழையவை அனைத்தையும் மறந்து, புதிதாக தொடங்க வழி வகுக்கும் பண்டிகையாகும்.
அடுத்த நாள், பொங்கல் பண்டிகை, தை 1 தமிழர்கள் அனைவராலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும், தனது ஒளிவற்ற ஒளியை தந்து, விவசாயிகளுக்கு பெரிதும் உருதுணையாக இருந்த, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே பொங்கல் பண்டிகை.
இந் நாளில், உழவர்களின் உழைப்பால் விளைந்த பொருட்களான மஞ்சள், இஞ்சி, கரும்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றைப் படைத்து புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு பால் பொங்கும் போது குழவை சத்தம் மற்றும் 'பொங்கலோ பொங்கல்' என மகிழ்ச்சியுடன் ஓசை எழுப்பி மகிழ்வர்.
இதை தொடர்ந்து, பொங்கலின் அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் பண்டிகையாகும், இந்நாளில் உழவர்கள் முதல் பால் வியபாரம் செய்வோர் வரை அனைவரும், தங்களது மாடுகளுக்கு நன்றி கூறும் வகையில் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து வழிபடுவதுதான் மாட்டுப்பொங்கல். மாடுகள் இல்லாத, உழவு தோழிலைப் பற்றி சிந்திக்கக் கூட முடியாது என்பது தான் உண்மை அல்லவா.
அடுத்த நாள் காணும் பொங்கல், இந்த பொங்கல் பெரும்பலான, பொங்கல் தகவல்கள், கட்டுரைகள் என இடம் பெறுவதில்லை. ஆனால் இந்த நாளும் பொங்கல் திருவிழாவின் முக்கிய நாளாகும். இந் நாளில் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்திட, தம் உறவினர்கள் வீட்டிற்கு சென்று, தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை பகிர்ந்து மகிழ்ந்திடுவர். மேலும், உறவினர்களை காண செல்லவதால், இந்த நாளை காணும் பொங்கல் என அழைக்கின்றனர்.
தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்துவது பொங்கல் திருநாள் ஆகும். நண்பர்களையும் உறவினர்களையும் உபசரித்தல், உழவுத்தொழிலுக்கு பெருமை சேர்த்தல் போன்ற நற்பண்புகளின் அடையாளமே பொங்கல் பண்டிகையின் சிறப்பு.
மேலும் படிக்க:
Flipkart Mobile Bonanza Sale: ரூ.1600க்கு Samsung இன் 5G போன்! விவரம் உள்ளே