Blogs

Sunday, 27 March 2022 08:35 PM , by: Elavarse Sivakumar

கார் என்பது நம்மில் பலரது கனவு. ஆனால் அப்படி நாம் ஆசைப்பட்டு வாங்கும் காரில், சமையலறை, படுக்கையறை மற்றும் கழிவறை வசதிகள் இருந்தால் எப்படி இருக்கும்?

நினைக்கவே மிக பிரம்மிப்பாக இருக்கிறது அல்லவா? இது சாத்தியமா எனத் தோன்றுகிறதா? சாத்தியம்தான் என நிரூபித்திருக்கிறார், UAE யைச் சேர்ந்த ஒருவர். ஆம். ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் வைத்திருக்கும் ஹம்மர் கார் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராட்சத கார் போல் தோற்றமளிக்கும் இந்த ஹம்மர் காரின் உயரம் 22 அடி, நீளம் 46 அடி, அகலம் 20 அடி ஆகும். இந்தக் கார் ஹம்மர் ஹெச் 1 எக்ஸ் 3 என்று அழைக்கப்படுகிறது. வழக்கமான ஹெச் 1 மாடல் ஹம்மர் காரின் அளவைவிட மூன்று மடங்கு அதிகம் என்பதால் ‘எக்ஸ் 3’ என்று சேர்க்கப்பட்டுள்ளது.

4 இன்ஜின்கள்

இந்தக் காரின் உள்ளே படுக்கையறை, கழிப்பறை, சமையலறை உள்ளன. ஒவ்வொரு சக்கரத்துக்கும் தனித்தனி இன்ஜின் என இந்தக் காரில் நான்கு டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஷேக் ஹமத் தீவிர கார் பிரியர். கோடிக் கணக்கில் பணம் செலவழித்து விதவிதமான கார்களை வாங்கி சேகரித்து வருகிறார். அபுதாபில், கார்களுக்கென்று தனியே அருங்காட்சியகம் வைத்துள்ளார். கார் சேகரிப்புகளுக்காக கின்னஸ் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

தற்போது அவரது அருங்காட்சியகத்தில்தான் இந்த ஹம்மர் கார் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கார் காட்சிப்படுத்த மட்டுமல்ல, ஓட்டவும் முடியம் என்பது கூடுதல் தகவல்.

மேலும் படிக்க...

வயிற்றின் நண்பன்- அத்தனை நோய்க்கும் அருமருந்து- அது எது?

நிலத்தடி நீர் குறையும் அபாயம்- விவசாயிகள் கவனத்திற்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)