1. தோட்டக்கலை

நிலத்தடி நீர் குறையும் அபாயம்- விவசாயிகள் கவனத்திற்கு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Risk of groundwater depletion - Farmers' attention!

மாறிவரும் பருவநிலை, தொடர்ந்து அதிகரிக்கும் நீரின் பயன்பாடு உள்ளிட்ட காரணங்கள், நம் நிலத்தடி நீர், கணிசமாகக்  குறையும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்திலுள்ள 1166 வட்டங்களில் 409வட்டங்களைதவிர மீதமுள்ள வட்டங்களில் நிலத்தடி நீரின் அளவு மிக மோசமாக உள்ளது. இதைபற்றி நாம் என்றாவது சிந்தித்தது உண்டா? இனியாவது சிந்திப்போம்.

இந்தத் தட்டுபாடு பிரச்சினை பசுமை புரட்சிஅறிமுகப்படுத்தியற்கு முன்னால் நம் தேசத்தில் இல்லை.1970க்கு பிறகு முற்றிலுமாக மாறிவிட்டது. பயிர் சாகுபடியில் உயர் விளைச்சல் ரகங்கள் பயிரிட நிலையான நீர்ப்பாசனம் தேவைபட்டது. இதன் காரணமாக, நிலத்தடிநீரை அதிகளவில் பயன்படுத்தும் சூழ்நிலை உருவானது. இதற்கு முக்கிய காரணமாக ஆழ் குழாய் அமைக்கும் தொழில் நுட்பம் தான். அதி தீவிர ஆழ் குழாய் அமைக்கும் பணியால், 1990க்கு பிறகு முற்றிலுமாக நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது.

அதே நேரத்தில் விவசாயப் பெருமக்கள் தங்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய, பயிர்களை ( நெல்,கோதுமை, கரும்புவாழை போன்றபயிர்கள்) ஆர்வத்துடன் பயிரிட விரும்பினர்.

இந்த பயிர்களை சாகுபடி செய்ய. அதிக அளவில் நீர் தேவைப்பட்டதால், நிலத்தடிநீரின் தேவையும் கணிசமாக அதிகரித்தது.அவ்வாறு நிலத்தடிநீரைத் தொடர்ந்து உறிஞ்சுவதாலும், நிலத்தடிநீர் மட்டம் குறைந்து கிணறுகளின் நீர் அளவு குறைந்து நாளடைவில் தூர்ந்து போய்விட்டது. 2001 சர்வேபடி 1.59லட்சம் கிணறுகள் நீர் இல்லாத நிலையில் பயனற்று போய் விட்டன.

நிலத்தடிநீரை எடுக்க போட்டிப் போட்டுக் கொண்டு 800அடி,1000அடி ஆழத்தில் ஆழ் குழாய் கிணறு அமைக்கப்பட்டு,பூமி முற்றிலுமாகச் சல்லடைச் சல்லடையாகத் துளைக்கப்பட்டு வருகின்றன. இதுதான் உண்மை என்றபோதிலும், நாம் அனைவரும் அறிந்த வருத்தபடக்கூடிய நிகழ்வாகும்.

தடுக்கும் நடவடிக்கை

  • மாற்றுபயிர் சாகுபடி

  • சொட்டுநீர் பாசன முறை கையாளுதல்

  • சிறு தானிய சாகுபடி

  • அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே ஆழ் குழாய் கிணறு 

  • பண்ணைக் குட்டை, கசிவு நீர்குட்டை அமைத்தல் கண்மாய், குளங்கள் தூர் வருதல் நீர் சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல்

  • பெய்கின்ற மழை நீரை முற்றிலுமாக சேகரித்தல்

  • மழையை வரவழைக்கும் மரங்களை நடுதல்

  • இதுபோன்ற முறைகளைக் கையாண்டால் நிலத்தடிநீர் மட்டம் உயரும்.

தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக் கோட்டை

மேலும் படிக்க...

இதைக் குடித்தால், வெயிலுக்கும் Goodbye- அதிக Weightக்கும் Goodbye!

தூக்கத்தைத் தொலைத்தவரா நீங்கள்? இந்த ஒரே பானம் போதும்!

English Summary: Risk of groundwater depletion - Farmers' attention! Published on: 26 March 2022, 11:28 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.