ரயில்வே ஊழியர்களின் சம்பளம் இந்த மாதமே உயரவிருக்கிறது. மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு, இம்மாத இறுதிக்குள் ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. ரயில்வே வாரியத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஊழியர்கள் மகிழ்ச்சி
ரயில்வே அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, திருத்தப்பட்ட விகிதங்களுடன் அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் இந்த முடிவால் சுமார் 14 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இந்த மாத இறுதிக்குள் இந்த பணம் வழங்கப்பட்டுவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தியது. இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் அதன் அனைத்து மண்டலங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாரியம் உத்தரவு
ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியானது 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இது 2022 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ரயில்வே வாரிய துணை இயக்குநர் ஜெய் குமார் அனைத்து மண்டலங்களுக்கும் வெளியிட்டுள்ளார்.
எப்போது கிடைக்கும்?
இந்த உத்தரவின் நகல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவுகளுக்கும் கிடைத்ததும், 2022 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி 34 சதவீதம் உயர்த்தப்படும் என்று அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சிவகோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ஏப்ரல் 30 ஆம் தேதி, நிலுவைத் தொகையுடன் அகவிலைப்படி வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
கொளுத்தும் வெயிலில் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாதா?
பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?