1. செய்திகள்

சூரியகாந்தி எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.200- பாமாயில் ரூ.140!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Sunflower oil is Rs.200 per liter- Palm oil is Rs.140- Housewives in shock!

சமையல் எண்ணெய் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ரஷ்யா- உக்ரைன் போரின் தாக்கமாகவே சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. இதன்படி, போருக்கு முன்பு ரூ.100 ஆக இருந்த சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது ரூ.200 ஆக உயர்ந்துள்ளது.

தொடரும் போர்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 43 நாட்களாகி விட்டன. இந்தப் போர் தொடர்ந்து நீடித்து வருவதால், இந்தியாவில் பல்வேறு பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக 5 மாநிலத் தேர்தல் நடக்கும் வரை, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே அவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்திக்கொண்டே வருகிறது. மேலும் சமையல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஆயிரம் ரூபாயை நெருங்கி விட்டது. வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.2,500-ஐ தாண்டி விட்டது. இதனால், சரக்கு வாகனங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

அதே வேளையில் சொந்தமாக கார், மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடும் உயர்வை சந்தித்து வருகிறது. கட்டுமான பொருட்களான சிமெண்டு, கம்பி, மணல் உள்ளிட்டவைகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.


எண்ணெய் விலை

உக்ரைனில் இருந்துதான் இந்தியாவுக்கு சூரியகாந்தி எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது அங்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், லிட்டர் ரூ.100-க்கு விற்கப்பட்டு வந்த சூரியகாந்தி எண்ணெய் தற்போது லிட்டர் ரூ.200 வரை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அதன் விலை 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதேபோல் நல்லெண்ணெய் லிட்டர் ரூ.200-ல் இருந்து ரூ.230 ஆகவும், கடலை எண்ணெய் ரூ.180-ல் இருந்து ரூ.220 ஆகவும், தேங்காய் எண்ணெய் ரூ.160-ல் இருந்து ரூ.200 ஆகவும், ரீபைண்ட் ஆயில் ரூ.110-ல் இருந்து ரூ.160 ஆகவும் அதிகரித்துள்ளது.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

மேலும் லிட்டர் ரூ.70-க்கு விற்பனையான பாமாயில் ரூ.140 ஆக விலை உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. போரை கைவிட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் உக்ரைன் - ரஷியா போர் இன்னும் முடுவுக்கு வரவில்லை.

மேலும் படிக்க...

கொளுத்தும் வெயிலில் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாதா?

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

English Summary: Sunflower oil is Rs.200 per liter- Palm oil is Rs.140- Housewives in shock! Published on: 08 April 2022, 10:10 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.