ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மாணவர்களே இல்லாத அரசு தொடக்கப் பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் தினமும் வந்து செல்கின்றனர். மாணவர்கள் இல்லாத நிலையில், வகுப்பு எடுக்கும் வாய்ப்பே இவர்களுக்குக் கிடைக்கவில்லை. இந்த பள்ளி கடந்த 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
முதுகுளத்தூர் அருகே மரவெட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த கிராமத்தில் 10-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த ஊரில் பெரியவர்கள் தவிர அனைவரும் முதுகுளத்தூரில் வசித்து வருகின்றனர். இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை செயல் பட்டு வருகிறது.
மாணவர்கள் சேரவில்லை
கடந்த ஆண்டு 5-ம் வகுப்பில் மட்டும் 1 மாணவி படித்து வந்தார். கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்று 6-ம் வகுப்பு சென்றதால் ஒரு மாணவிக்காக இயங்கிய பள்ளி தற்போது ஆளே இல்லாத பள்ளிக்கூடம் ஆனது.இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு ஒருவர் கூட சேரவில்லை.
வகுப்பு எடுக்கவில்லை
கடந்த 2½ மாதங்களாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் 2 பேர் மட்டுமே இ்ந்த பள்ளியில் காலையில் வந்து மாலை வரை இருந்துவிட்டு சென்று விடுகின்றனர்.கடந்த 2½ மாதங்களாக இந்த பள்ளியில் மாணவர்கள் இல்லை என்று தெரிந்தும் கல்வி துறை அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை.
எத்தனையோ பள்ளிகளில் அதிக மாணவர்கள் இருந்தும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால் சரிவர பாடம் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் அரசு பள்ளிகள் மீது உள்ளது, அதுபோன்ற பள்ளிகளுக்கு இந்த ஆசிரியர்களை இடமாற்றி இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!