பள்ளியில் சேர ஆதார் அட்டை தேவையில்லை. ஆனால், அங்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகள் உணவு பெற ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பு
விரைவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு பெறும் மாணவர்களின் விவரங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும். அரசு உத்தரவின்படி 2013 ஜனவரி முதல் இந்த விதியை அமல்படுத்துவதுவதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மாநிலத்தில் ஆதார் அட்டை தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை 59 லட்சம் என்று கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஆதார் இல்லை
மாநில அரசின் தரவுகளின்படி, மகாராஷ்டிராவில் அரசு உதவி பெறும் மற்றும் உதவிபெறாத பள்ளிகளில் தற்போது 23,313,762 குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களில் 1,955,515 (8 சதவீதம்) குழந்தைகளிடம் ஆதார் அட்டை இல்லை.மீதமுள்ள 21,358,247 குழந்தைகளில் ஆதார் பதிவு செய்தவர்களில், 4,001,250 (18 சதவீதம்) பேருக்கு சரியான ஆதார் அட்டை இல்லை.
மந்திரக்கோல்
பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் இல்லை என மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால், வசதிகளைப் பெற, மாணவர்களிடம் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். மதிய உணவு திட்டம் என்பது இந்தியாவில் மாணவர்களுக்கான பிரத்யேக மற்றும் பிரபலமான உணவு திட்டம் என்பதுடன், மாணவர்களை பள்ளிக்கு வரவைக்கும் ஒரு அற்புதமான மந்திரக்கோலாக செயல்படுகிறது.
மதிய உணவுத் திட்டத்தை ஆதாருடன் இணைக்கும் முடிவு என்பது, பள்ளிக் கல்வியில் பல காரணிகளை பாதிக்கும் சாத்தியம் உள்ளது. ஆதார் அட்டை இல்லாத மாணவர்கள் 2023 ஜனவரி முதல் மதிய உணவு, இலவசச் சீருடை வழங்குவது போன்ற பல பலன்களைப் பெற முடியாது.
காலக்கெடு
இந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் இதை சரி செய்ய ஆசிரியர்களுக்கு காலக்கெடுவை வழங்கியுள்ளோம், இதனால் ஒவ்வொரு குழந்தையும் பள்ளி பயன்களைப் பெற முடியும், ”என்று மாநில கல்வித் துறையின் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் படிக்க...
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!