
கேரள(Kerala) மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காடுதுரதி (Kaduthuruthy) என்ற ஊரில் மேங்கோ மெடொவ்ஸ் (Mango Meadows) என்ற ஒரு தீம் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பார்க் ஆனது முழுக்க முழுக்க வேளாண்மை சார்ந்த ஒரு பொழுதுபோக்கு பூங்காவாக தயார் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் வேளாண்மை கேளிக்கை பூங்கா(Agricultural Theme Park) என்ற பெறுமை, இந்த தீம் பார்க்கையே சேரும்.
இந்த விவசாய பூங்காவை அமைத்த பெறுமை N.K.குரியன் என்ற ஒரு தனிமனிதரையே சேரும். முழுக்க முழுக்க விவசாயத்தை கருப்பொருளாக கொண்ட ஒரு கேளிக்கை பூங்காவை அமைக்க வேண்டும் என்று இவர் முடிவெடுத்திருந்தார். அதன் படி, இவர் வளைகுடா நாடுகளில் பணி செய்து, தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் இந்த பூங்காவை அமைக்க முதலீடு செய்துள்ளார், இதை பார்த்து ஊரார் மற்றும் உறவினர்கள் எல்லோரும் "வெளிநாட்டிலிருந்து மூட்டை மூட்டையாக பணத்தை சம்பாதித்து பைத்தியம் மாதிரி வெட்டி செலவு செய்கிறான் பாரு" என்று இவரை பற்றி அதிகம் கேளி கிண்டல் செய்தார்கள் என்று ஒரு நேர்காணலில் இவரே குறிப்பிட்டுள்ளார்.
இவர் 2004 இல் பூங்காவை வடிவமைக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் இரவு பகலாக கடுமையாக உழைத்து, இந்த பூங்காவை 2016-இல் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போதுவாகவே, கேரளா என்று குறிப்பிட்டாலே, நமக்கு முதலில் நினைவுக்கு வருவது, அம்மாநிலத்தின் பசுமை காட்சிதான். அதில், இவ்வாறான புதுமை, கூடுதலாக வியப்படையச் செய்கிறது.
தமிழ்நாடு CM பெல்லோஷிப் 2022-24: ரூபாய் 50000 உதவித் தொகை விண்ணப்பப் படிவம், தகுதி! அறிந்திடுங்கள்!
கிட்டத்தட்ட 35 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியது தான் இந்த மேங்கோ மெடொவ்ஸ் வேளாண்மை தீம் பார்க். இந்த விவசாயம் சார்ந்த வேளாண்மை கேளிக்கை பூங்காவில் அப்படி என்ன தான் சிறப்பு என்கிறீர்களா?. மேலும் பதிவை காணுங்கள்.
பூங்காவின் நுழைவுவாயிலில் "இது முழுக்க முழுக்க வேளாண்மையை பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்ட தீம் பார்க் ஆதலால் வேறு பொழுதுபோக்கு அம்சங்களை எதிர்பார்த்து உள்ளே செல்ல வேண்டாம்" என்று மலையாளத்தில் அறிவிப்பு பலகை வைத்து வரவேற்கிறார்கள், இம்மக்கள்.
அசைவ உணவுப் பிரியர் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது- ஆண்கள்
கிட்டத்தட்ட 4500 வகையான தாவரங்கள் மற்றும் மரங்கள், இந்த பூங்காவில் பராமரிக்கப்படுகிறது. இதனால் பார்க்கும் திசையெல்லாம் பச்சை பசெல் என்று ரம்மியமாக காட்சி அளிக்கிறது, இந்த பார்க். இதில் 1900 வகையான மருத்துவ குணம் கொண்ட தாவரங்களும், 700 வகையான மரங்களும், 900 வகையான பூச்செடி வகைகளும் பராமரித்து வளர்ப்பதோடு அந்த தாவரங்களுக்கான விளக்கங்களை கொடுக்க கைட் (guide) என்று சொல்லக்கூடிய ஆட்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் 35 ஏக்கரையும் சுற்றி பார்ப்பதற்கு சாலைவசதியும் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கான சிறப்பான தளம், இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க:
LPG Subsidy : சிலிண்டர் மானியம் வரலயா? இவ்வாறு செக் செய்யலாம்