1. Blogs

அசைவ உணவுப் பிரியர் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது- ஆண்கள்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Non-vegetarians topped the list by men

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பு, 2019-21 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் அசைவ உணவு உண்பவர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது, இதில் ஆட்சரியமான தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக 2015-16 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை ஒப்பிட்டு, தற்போதைய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

அதன்படி 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 83.4 சதவீத ஆண்களும், 70.6 சதவீத பெண்களும் தினமும் அசைவ உணவு சாப்பிடுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரம் 2015-16 ஆம் ஆண்டில் 78.4 சதவீத ஆண்களும், 70 சதவீத பெண்களும் மட்டுமே அசைவ உணவை சாப்பிட்டு வந்ததாக ஆய்வில் தெரியவருகிறது.

மேலும் 15 வயது முதல் 49 வயது வரை உள்ள பிரிவில், அசைவ உணவே சாப்பிடாமல் இருந்த ஆண்களில், தற்போது 16.6 சதவீதம் பேர் மீன், இறைச்சி உள்ளிட்டவற்றை சாப்பிடுவதும் தெரிய வந்துள்ளது குறிப்பிடதக்கது. அதைப் போல், 15 முதல் 49 வயது வரை உள்ள பிரிவில் அசைவ உணவே சாப்பிடாத பெண்களில், தற்போது 29.4 சதவீதம் பேர் மீன், இறைச்சி உள்ளிட்டவற்றை உண்பது தெரிய வந்திருப்பது குறிப்பிடதக்கது.

ஆய்வின் தரவுகள்:

  • அசைவ உணவை எடுத்துக் கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை கடந்த ஆறு வருடங்களில் கணிசமாக உயர்ந்துள்ளது.
  • தினமும் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைவு தான். ஏனென்றால், வாரத்தில் ஒரு நாள் மட்டும் பலர் அசைவம் சாப்பிடுகிறார்கள்.
  • அதே நேரம், 15 வயது முதல் 49 வயது வரை உள்ள ஆண்களில் ஒரு பங்கினர் அசைவத்தை சாப்பிட்டதே இல்லை என்பதும் ஆய்வில் தரவுகள் தெரிவிக்கின்றன.
  • ஜூன் 17, 2019 முதல் ஏப்ரல் 30, 2021க்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு கட்டங்களாக, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. மீன், சிக்கன், இறைச்சி ஆகியவை அசைவ உணவுகளாக ஆய்வுப் பட்டியலில் இருந்தன என்பது குறிப்பிடதக்கது.
  • 2019 - 2021 வரையிலான ஆய்வில், 16.6 சதவீதத்தினர் அசைவம் சாப்பிட மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். 2015 - 2016 வரை எடுக்கப்பட்ட ஆய்வில், இந்த எண்ணிக்கை 21.6 சதவீதம் பேராக இருந்தது குறிப்பிடதக்கது.
  • 2019-2021 காலகட்டத்தில், 15 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 29.4 சதவீதம் பேர் அசைவம் உட்கொண்டதில்லை என்று தெரிவித்துள்ளனர். 2015-2016 காலகட்டத்தில், இந்த எண்ணிக்கை 29.9 சதவீதமாக இருந்தது என்பதும். இதில் பெரியளவிலான மாற்றம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

ஆய்வில் வெளியிடப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:-

  • எப்போதாவது அல்லது வாரத்திற்கு ஒருமுறை இறைச்சி உண்பவர்கள் ஆண்கள் மத்தியில் 48.9 சதவீதத்திலிருந்து 57.3 சதவீதமாக உயர்ந்துள்ளனர்.
  • எப்போதாவது அல்லது வாரத்திற்கு ஒருமுறை இறைச்சி உண்பவர்கள் எண்ணிக்கை சிக்கிம் மாநிலத்தில் கணிசமாக அதிகரித்திருப்பதும், அதே வேளையில், திரிபுராவில் வெகுவாக குறைந்துள்ளதும் குறிப்பிடதக்கது.

பிரதம மந்திரி வய வந்தனா திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?

  • அதிக அசைவ உணவு உண்பவர்கள் லட்சத்தீவிலும் (98.4 சதவீதம்) மற்றும் குறைவாக ராஜஸ்தானிலும் (14.1 சதவீதம்) உள்ளனர். அந்தமான் நிக்கோபார் தீவுகள், கோவா, கேரளா மற்றும் புதுச்சேரியில், அசைவ உணவு உண்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்த பட்டியலில் ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடைசி இடத்தை பிடித்திருக்கின்றன.
  • 15-49 வயதிற்குட்பட்டவர்களில், வாரத்திற்கு ஒருமுறை அசைவ உணவை அதிகம் உட்கொள்வதில், கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் முன்னிலை வகிக்கின்றனர். இவர்களை தொடர்ந்து,
இந்து மதம் ஆண்கள்: 52.5% பெண்கள்: 40.7% 
இஸ்லாம மதம் ஆண்கள்: 79.5% பெண்கள்: 70.2%
சீக்கிய மதம் ஆண்கள்: 19.5% பெண்கள்: 7.9%
புத்த மதம் ஆண்கள்: 74.1% பெண்கள்: 62.2%
ஜெயின் மதம் ஆண்கள் 14.9% பெண்கள்: 4.3%

6 மாதங்களுக்குள் 'Green Card' வழங்க அமெரிக்கா அதிபருக்கு, குழு பரிந்துரை

  • 96.2 சதவீத ஆண்களும், 94.2 சதவீத பெண்களும் தினமும் அல்லது வாரந்தோறும் பால் மற்றும் தயிர் சாப்பிடுகிறார்கள் எனவும் இத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு, 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில், மொத்தம் 83.4 சதவீத ஆண்களும், 70.6 சதவீத பெண்களும், அசைவ உணவுகளை தினமும் அல்லது வாரந்தோறும் அல்லது எப்போதாவது சாப்பிடுவது வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆறு வருடங்களில், அசைவ உணவுகளின் பல புதுமையான உணவுகள் வந்துள்ளன, எனவே அசைவம் சாப்பிடாத மக்களும், அசைவத்தை ரூசிக்க ஆர்வம் கொள்கின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் படிக்க:

Amul Recruitment 2022: சூப்பர் வேலைவாய்ப்பு, 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்

Breaking: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, "பேரறிவாளன் விடுதலை"

English Summary: Non-vegetarians topped the list - men Published on: 18 May 2022, 05:35 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.