கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியியலாளர் விவசாயியாக மாறியுள்ளார். இவர் விதை வங்கி மற்றும் அரிய காய்கறிகளை வளர்ப்பதற்காக தனது பொறியாளர் வேலையை விட்டு வெளியேறி இந்த வேளாண் தொழிலைச் செய்து வருகிறார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட பூசணி வகைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? கத்தரிக்காயில் 60க்கும் மேற்பட்ட வகைகளும், ஓக்ராவில் 10க்கும் மேற்பட்ட ரகங்களும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இது ஆச்சரியப்படத்தக்க விஷயமாகத் தோன்றினாலும், இந்த வகைகளில் பல அழியும் விளிம்பில் உள்ளன. சந்தைகளில் மிகவும் பொதுவான மற்றும் பிரபலமானவை மட்டுமே விற்கப்படுவதால், மீதமுள்ளவற்றின் வளர்ப்பு மற்றும் அறிதல்கள் குறைவாக இருக்கின்றன.
முடிந்தவரை பல வகையான காய்கறிகளைச் சேமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கோயம்புத்தூரைச் சேர்ந்த 38 வயதான அரவிந்தன் ஆர் பி தனது கனவைத் தொடர இன்ஜினியர் வேலையை விட்டுவிட்டார். இதுவரை, அவர் பல்வேறு விதைகளை சேகரித்து நடவு செய்துள்ளார். சுமார் 70 வகையான கத்திரிக்காய்கள், 20 வகையான ஓக்ராக்கள், 28 வகையான தக்காளிகள் 20 வகையான பீன்ஸ் வகைகள் ஆகியவற்றைச் சேமித்து வைத்துள்ளார் இவர்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர் “இதைச் செய்து முடிப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ஆனால் இந்த வகை விதைகளை சேமிப்பது இப்போது எனது ஆர்வமாக மாறிய விதத்தில் விவசாய வாழ்க்கை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
உண்மையான கரிம விளைபொருட்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியாத போது, நாம் அவற்றை வளர்க்கிறோம். தமிழ்நாட்டின் கரூரில் பிறந்து வளர்ந்த அரவிந்தன் எப்போதும் விவசாயத்தின் தாக்கத்தில் இதைத்தான் எண்ணிக்கொண்டு இருந்ததாகக் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் பொறியியல் பட்டம் மற்றும் முதுகலைப் படிப்பை முடித்த அவர், 2012 இல் தனது தாய்நாட்டிற்கு வருவதற்கு முன்பு சில ஆண்டுகள் கார்ல்ஸ்ரூ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றினார்.
இந்தியா வருவதற்கான முடிவு அரவிந்தனின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது விவசாய எண்ணம் தான். தான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்று என் தந்தை விரும்பியதால், அதற்குத் தயாராக வேண்டும் என்று முடிவு செய்ததாகவும், இதற்கிடையில், என் தந்தை கோயம்புத்தூரில் உள்ள ஒரு பள்ளியின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டார், எனவே நாங்கள் அதனுடன் நெருக்கமாகிவிட்டோம், ”என்றும் அவர் பகிர்ந்து கொள்கிறார்.
மேலும் அவர் கூறுகையில் "எங்களிடம் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்களது குடியிருப்பில் வசித்து வருகின்றனர், அவர்களுக்கு சத்தான உணவை வழங்க விரும்புகிறோம். ஆர்கானிக் காய்கறிகளை விற்கும் விற்பனையாளர்களை நாங்கள் தேடிய நிலையில், ஆனால் அவை உண்மையில் ஆர்கானிக் என்று எந்த ஆதாரமும் இல்லாத நிலை ஏற்பட்டது. ஆகவே நாங்கள் எங்கள் சொந்த உணவை வளர்க்க முடிவு செய்தோம், ”என்று கூறியுள்ளார்.
அதோடு, தனது முன்னோர்கள் விவசாயிகளாக இருந்ததாகவும், அதனால் இயற்கை மற்றும் விவசாயத்தின் மீது தனக்கு விருப்பம் இருந்ததாகவும் அவர் பகிர்ந்து கொண்டார். ஆனால் இயற்கை விவசாயத்தில் அதிக அனுபவம் இல்லாததால், அரவிந்தன் சிறிய அளவில் தொடங்கி பள்ளியின் மொட்டை மாடியில் சில காய்கறிகளை நடவு செய்திருக்கிறார்.
விதைகளைப் பாதுகாப்பதிலும், பல்வேறு உயிரினங்களைக் காப்பாற்றுவதிலும் நீங்கள் ஆர்வமாக இருந்தால், அவிநாதன் தனது அறிவை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறார். நீங்கள் அவரை 76395 55088 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க
புதிய இ-சேவை மையங்கள் தொடங்க இளைஞர்களுக்கு வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்க!
விவசாயிகளே மகிழ்ச்சி செய்தி!! நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.450 கோடி!