மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் புதிய ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும் என்பதால், விருப்பமுள்ளவர்கள், உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட 18 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவி யானைப் பாகன்
கல்வித் தகுதி (Educaional Qualification)
தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். யானைக்கு பயிற்சி அளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ. 11,600 – ரூ.36,800
கால்நடை பராமரிப்பு தொழிலாளர்
கல்வித் தகுதி (Educaional Qualification)
தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ. 10,000 – 31,500
தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்)
கல்வித் தகுதி (Educaional Qualification)
கட்டட பொறியியலில் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ. 20,600 – ரூ.65,500
துப்புரவு தொழிலாளர்
கல்வித் தகுதி (Educaional Qualification)
தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ. 10,000 – 31,500
வயது வரம்பு (Age Limit)
விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை (Selection)
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மீனாட்சி அம்மன் கோயில் அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தினை ரூ. 100 செலுத்தி பெற்றுக் கொள்ளவும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
கடைசி தேதி : 07.10.2022
செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!