Blogs

Sunday, 27 December 2020 09:05 AM , by: Elavarse Sivakumar

Credit : Navabharat times

பாரத ஸ்டேட் வங்கியில் துணைமேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள துணை மேலாளர், துணை மேலாளர், பொறியாளர், உதவி மேலாளர், திட்ட மேலாளர், டெக்னிக்கல் போன்ற பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 452 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட (Appointemnt) உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி (Degree) இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடங்கள் (Vacancies)

Deputy Manager      - 131 
Engineer                 - 16 
Manager                 - 46 
Assistant Manager   - 223 
IT Security Expert   - 15 
Project Manager      - 14
Application Architect - 05
Technical Lead         - 02

தகுதி(Qualification)

சிஏ, பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்பிஏ, பிசிடிபிஎம் (C.A, B.E, B.Tech, MCA.,MBA., BCDPM)முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு(Age Limit)

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதி மற்றும் வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இணையதளத்தில் இடம்பெற்றுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
பொதுவாக 31.10.2020ம் தேதியின்படி 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை (Selection)

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை(How to Apply)

https://www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் (Fees)

ரூ.750யை கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

கடைசி நாள் (Last Date)

11.01.2021
சம்பளம், பணி அனுபவம் போன்ற விவரங்கள் பற்றி அறிய https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறிவிப்பாக படித்து தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க...

ரூ.1லட்சம் ஊதியத்தில் அரசு வேலை - முழு விபரம் உள்ளே!

அரசு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி- ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஊதியம்!

ரபி பருவப் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய அழைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)