Blogs

Saturday, 09 July 2022 07:17 PM , by: R. Balakrishnan

ATM Business: Make Money From Home

வீட்டில் அமர்ந்துகொண்டே பணம் சம்பாதிக்க விரும்பினால், உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு உள்ளது. வீட்டில் இருந்தபடியே மாதம் 80,000 ரூபாய் சம்பாதிக்கலாம். மிக முக்கியமாக, இது ஒரு பாதுகாப்பான முறையாகும். இந்தியாவின் மிகப் பெரிய பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) உங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்குகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஏடிஎம் உரிமையைப் பெறுவதன் மூலம் நீங்கள் எளிதாக சம்பாதிக்கலாம். எந்த வங்கியின் ஏடிஎம் எந்திரமும் வங்கி சார்பில் நிறுவப்படுவதில்லை. அதற்கென தனி நிறுவனம் உள்ளது. அதன் ஒப்பந்தம் வங்கியால் வழங்கப்படுகிறது. எனவே ஏடிஎம் உரிமையைப் பெறுவதன் மூலம் நீங்கள் அதிகமாகப் பணம் சம்பாதிக்கலாம்.

நிபந்தனைகள் (Rules)

  • எஸ்பிஐ ஏடிஎம்ன் உரிமையைப் பெற, உங்களிடம் 50-80 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.
  • மற்ற ஏடிஎம்களில் இருந்து அதன் தூரம் 100 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும்.
  • இந்த இடம் தரை தளத்தில் இருக்க வேண்டும். பார்வை படும் இடத்தில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • 24 மணி நேரமும் மின்சாரம் இருக்க வேண்டும். இது தவிர, 1 கிலோ வாட் மின் இணைப்பும் கட்டாயம்.
  • இந்த ஏடிஎம் ஒரு நாளைக்கு சுமார் 300 பரிவர்த்தனைகள் செய்யும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
  • ஏடிஎம் இடத்தில் கான்கிரீட் கூரை இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் (Documents)

  • அடையாளச் சான்று - ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை
  • முகவரிச் சான்று - ரேஷன் கார்டு, மின்சார பில்
  • வங்கி கணக்கு மற்றும் பாஸ்புக்
  • புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண்
  • பிற ஆவணங்கள்
  • ஜிஎஸ்டி எண்
  • நிதி ஆவணங்கள்

எப்படி விண்ணப்பிப்பது? (How to apply)

எஸ்பிஐ ஏடிஎம் உரிமத்தை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Tata Indicash, Muthoot ATM மற்றும் India One ATM ஆகியவை இந்தியாவில் ஏடிஎம்களை நிறுவும் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. இதற்காக இந்த அனைத்து நிறுவனங்களின் இணையதளங்களிலும் ஆன்லைனில் லாக் இன் செய்து உங்கள் ஏடிஎம் அமைக்கும் தொழிலுக்கு விண்ணப்பிக்கலாம்.

  • டாடா இண்டிகேஷ் - www.indicash.co.in
  • முத்தூட் ஏடிஎம் - www.muthootatm.com/suggest-atm.html
  • இந்தியா ஒன் ஏடிஎம் - india1atm.in/rent-your-space

முதலீடு (Investment)

இந்த நிறுவனங்களில், டாடா இண்டிகேஷ் மிகப்பெரிய மற்றும் பழமையான நிறுவனமாகும். முதலில் நீங்கள் ரூ.2 லட்சம் பாதுகாப்பு வைப்புத் தொகை வழங்க வேண்டும். இது தவிர, நீங்கள் ரூ.3 லட்சத்தை செயல்பாட்டு மூலதனமாக டெபாசிட் செய்ய வேண்டும். இந்த வழியில், நீங்கள் இதில் மொத்தம் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

இலாபம் (Profit)

இதில் வருமானத்தைப் பார்த்தால், ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் 8 ரூபாயும், பணமில்லா பரிவர்த்தனைக்கு 2 ரூபாயும் கிடைக்கும். அதாவது, முதலீட்டின் மீதான வருமானம் ஆண்டு அடிப்படையில் 33-50 சதவீதம் வரை கிடைக்கும். உங்கள் ஏடிஎம் மூலம் தினமும் 250 பரிவர்த்தனைகள் நடந்தால், அதில் 65 சதவீதம் பண பரிவர்த்தனை மற்றும் 35 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனை என்றால், உங்கள் மாத வருமானம் 45,000 ரூபாய் வரை இருக்கும்.

மேலும் படிக்க

நீங்கள் வாங்கும் ரூபாய் நோட்டுக்கள் இப்படி இருக்க? அப்போ செல்லாது!

கூட்டுறவு வங்கி வழியாக மாணவியருக்கு ரூ.1,000 உதவித்தொகை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)