குழந்தை பிறப்பு என்பதே மகிழ்ச்சியான விஷயம். அதிலும் ஆண் குழந்தை பிறந்தால் அனைவருக்குமே இரட்டிப்பு மகிழ்ச்சி.
வானரக்கூட்டம்
இப்படியொரு இரட்டிப்பு மகிழ்ச்சிதான் பிரேசிலைச் சேர்ந்த இந்தத் தம்பதிக்கு கிடைத்தது. இருப்பினும் அவர்கள் வியப்படைந்த இன்னொரு விஷயம் என்ன தெரியுமா? குழந்தையின் உடலில் இருந்த வால். இராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்களில் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த ஆண்கள் வாலுடன் பிறந்தததாகக் கூறப்படுகிறது.
அனுமன், வாலி, சுக்ரீவன் போன்ற வாலுடன் இருந்ததாகவும் இவர்கள் வானரக்கூட்டத்தைச் சேர்ந்ததாகவும் நம்பப்படுகிறது.
வாலுடன் பிறந்த குழந்தை (The baby born with the tail)
இதிகாசங்களை ஒத்த ஒரு நிகழ்வு தற்போது பிரேசிலில் சம்பவித்துள்ளது. அதாவது அழகிய ஆண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம்பித்தான் ஆக வேண்டும்.
பிரேசிலில் பிறந்தக் குழந்தைக்கு உடலின் பின் பகுதியில் வால் இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தை பிறந்த போது, வால் 12 செ.மீ., இருந்ததாகவும், வாலின் நுனியில் 4 செ.மீ., விட்டம் கொண்ட பந்து போன்று இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். பின்னர், அறுவை சிகிச்சை மூலம் பெற்றோரின் சம்மதத்துடன் அந்த வால் அகற்றப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வால் உருவாகும் (The tail is formed)
பொதுவாக, குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது, ஆரம்ப நாட்களில், அதாவது 4 முதல் 8 வாரங்களில் அதற்கு ஒரு சிறு வால் போன்ற அமைப்பு உருவாகும்.
குழந்தை வளர வளர, அந்த வால் மறைந்து விடும். ஆனால், அபூர்வமாக சிலருக்கு அந்த வால் மறையாமல் வளருவதும் உண்டு.அந்தவகையில், இந்தக் குழந்தையின் வால் மறையாமல் அப்படியே இருந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாலில் உருண்டை (Round in the tail)
இந்தக் குழந்தையின் வாலின் நீளம் எவ்வளவு தெரியுமா? , 12 சென்டி மீட்டர். அதன் நுனியில் ஒரு உருண்டையான அமைப்பும் காணப்படுகிறது. வாலுடன் பிறந்த குழந்தை தெய்வ அம்சம் பொருந்தியக் குழந்தை என்பதால், அப்பகுதி மக்கள் இக்குழந்தையைக் காணக் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் படிக்க...