1. தோட்டக்கலை

தரிசு நிலத்தில் நிலக்கடலைப் பயிர் செய்ய ரூ. 22,800 மானியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
To cultivate groundnut in barren land Rs. 22,800 grant!
Credit : Boldsky Tamil

தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

தரிசு நிலங்கள் (Barren lands)

சேலம் மாவட்டத்தில் 2021-22-ம் நிதி ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வாயிலாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், 370 ஹெக்டேர் பரப்பளவுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

எந்தப் பணிகளுக்கு மானியம்?

குறிப்பாக, நிலத்தில் உள்ள முட்புதர்களை அகற்றுதல், நிலத்தை சமன்செய்தல், உழவு பணிகள், விதை, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கலவை விநியோகங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.

சிறுதானியங்கள் (Cereals)

தரிசு நிலங்களில் சிறுதானியங்கள் 200 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய ரூ.26.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுதானியங்கள் பயிர் சாகுபடிக்கு மானியமாக ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 400 வழங்கப்பட உள்ளது.

பயறு வகைகள் (Legumes)

பயறு வகைகள் 120 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு ரூ.16.08 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளன. பயறு வகைகள் பயிர் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 400 மானியமாக வழங்கப்படவுள்ளது.
நிலக்கடலை 50 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய ரூ.11.40 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நிலக்கடலை பயிர் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.22 ஆயிரத்து 800 மானியமாக வழங்கப்படவுள்ளது.

தொடர்புக்கு (Contact)

எனவே, தரிசு நிலங்களில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

தகவல்
கார்மேகம்
சேலம் மாவட்ட ஆட்சியர்

மேலும் படிக்க...

தமிழக விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1,234 கோடி பட்டுவாடா!

நெற்பயிர் வயல் வரப்பில் பயறு வகை: மகசூலை அதிகரித்து, மன்வளத்தை கூட்டும்

English Summary: To cultivate groundnut in barren land Rs. 22,800 grant! Published on: 06 November 2021, 07:27 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.