ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாட்டில் நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் பூங்கா தேர்வாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்திருக்கின்றது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் இருக்கின்றன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
இந்தப் பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளின் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் ஊழியர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டில் சிறந்த உயிரியல் பூங்காவாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாட்டில் சிறந்த மேலாண்மை, பராமரிப்பு என்ற அடிப்படையில் 82 சதவீத புள்ளிகளைப் பெற்ற வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் சிறந்த சுற்றுலா தளமாக வண்டலூர் பூங்கா அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்காவாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க