மாணவர் ஒருவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, பொதுத் தேர்வு நேரத்தில், முட்டை பிரியாணி விருந்து அளித்து, மாணவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஒரு ஆசிரியர்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ‘முட்டை பிரியாணி’ விருந்து அளித்து அசத்தியுள்ளார் அப்பள்ளியின் கணித ஆசிரியர்.
கனித ஆசிரியர் (Mathematical teacher)
பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் எல்.நாடிமுத்து. கணிதத்தில் முனைவர் ( Ph.D) பட்டம் பெற்றுள்ள நாடிமுத்து பட்டுக்கோட்டையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள நாட்டுச்சாலை ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
விவசாயிகளின் குழந்தைகள்
அங்கு ஆத்திக்கோட்டை, தளிக்கோட்டை, படப்பைக்காடு, வெண்டாக்கோட்டை, பாப்பாவெளி, பாளையக்கோட்டை, நாட்டுச்சாலை ஆகிய 7 கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அவர்களின் பெற்றோர் பெரும்பாலும் கல்வியறிவு இல்லாத விவசாய கூலித் தொழிலாளிகள்.
10-ம் வகுப்புக்கான கணிதத் தேர்வு முடிவடைந்த நிலையில், மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்தும் விதமாக பிற்பகல் மதிய உணவாக தனது சொந்த செலவில் ‘முட்டை பிரியாணி’ விருந்து அளித்து அசத்தியுள்ளார் கணித ஆசிரியர் நாடிமுத்து.
நான் கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித தேர்வை முன்னிட்டு, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறேன். அச்சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிரை உற்சாகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு நாளும் எனது சொந்த செலவில் டீ, பிஸ்கட் வழங்குவேன். இதை கடந்த 17 ஆண்டுகளாக செய்து வருகிறேன்.
சொந்த செலவில்
அப்படி, சிறப்பு வகுப்பில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர் சில தினங்களுக்கு முன் என்னிடம் ‘ஸார், எனக்கு பிரியாணி சாப்பிட வேண்டும் என ஆசையாக இருக்கிறது. இந்த ஆண்டு எங்களுக்கு உங்க செலவுல பிரியாணி வாங்கி கொடுங்க, ஸார்,’ என கோரிக்கை விடுத்தார். எனவே, அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் மாணவ, மாணவியர் அனைவருக்கும் கணித தேர்வுக்கு முதல் நாளில், மதிய உணவாக ‘முட்டை பிரியாணி’ விருந்து அளித்தேன்,” என்கிறார் ஆசிரியர் நாடிமுத்து.
அந்த மாணவனின் ஆசையை நிறைவேற்றியதில் எனக்கு மனசுக்கு ரொம்ப திருப்தியாக உள்ளது. அதைவிட இன்னொரு விஷயம், எனது வாழ்க்கையில் இப்போதுதான் முதன்முறையாக பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன் என மற்றொரு மாணவர் கூறினார். அதைக்கேட்டு நான் நெகிழ்ந்து போய்விட்டேன்” என்றுத் தெரிவித்தார் ஆசிரியர் நாடிமுத்து.
மற்ற பாடங்களுக்கான கேள்வி பதில்களை மாணவர்கள் மனனம் செய்து தேர்வில் எழுதி பாஸாக முடியும். ஆனால், கணிதப் பாடம் அப்படியல்ல. மற்ற பாடங்களைப் போல மனப்பாடம் செய்து தேர்வில் எழுத முடியாது. கணிதச் சூத்திரங்களைப் புரிந்து கொண்டு தொடர்ந்து முறையாக பயிற்சி செய்தால்தான் மாணவர்களால் சரியாக விடையளிக்க முடியும் என்கிறார் நாடிமுத்து.
மேலும் படிக்க...
ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!
Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!