1. Blogs

Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Jobs in Indian Air Force - Rare opportunity for Plus 2 graduates!

முப்படைகளுள் ஒன்றான இந்திய விமானப் படையில் பணியாற்றி, நாட்டுக்கு சேவை செய்ய விருப்பமா? இதன் மூலம் நம் தாய்மண்ணிற்கும் மரியாதை செலுத்தக்கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கும் கிடைக்கிறது. மத்திய அரசில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்க உள்ளது. உடனே விண்ணப்பிக்கவும்.

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள இளநிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இளநிலை எழுத்தர் (Lower Division Clerk)

கல்வித் தகுதி ( Educational Qualification)

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயது (Age)

28.09.2021 அன்று 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு (Age Limit)

இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை (Selection)

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_1_2223b.pdf என்ற என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி 

Presiding Officer, Civilian Recruitment Board, Air Force Record Office, Subroto Park, New Delhi-110010

விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)

21.06.202

எனவே விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க...

ஆதார் மூலம் வருமானம்… அடடே, சூப்பர் Offer?

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

English Summary: Jobs in Indian Air Force - Rare opportunity for Plus 2 graduates! Published on: 25 May 2022, 06:45 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.